மகிழடித்தீவில் சர்வதேச யோகாதின நிகழ்வு: 400 மாணவர்கள் பங்கேற்பு

Report Print Dias Dias in சமூகம்
42Shares
42Shares
lankasrimarket.com

கலாபூசணம் செல்லையா துரையப்பா மாணவர்கள் நடத்திய 4ஆவது சர்வதேச யோகா தின நிகழ்வு மகிழடித்தீவு பொது விளையாட்டு மைதானத்தில் இன்றைய தினம் இடம்பெற்றது.

மட்டக்களப்பு யோகா ஆரோக்கிய இளைஞர் கழகமும் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயமும் இணைந்து இந்த நிகழ்வினை நடத்தியிருந்தனர்.

குறித்த நிகழ்வின்போது 400 பாடசாலை மாணவர்களும், பல ஆசிரியர்களும் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது, மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் உருவாக்கப்பட்டுள்ள ஐஸ்வரியம் யோகாமன்ற உறுப்பினர்கள், மாவட்ட யோகா குரு செல்லையா துரையப்பா, மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் அகிலா கனகசூரியம் ஆகியோரிடம் மாணவர்கள் ஆசிகளைப் பெற்றுக்கொண்டனர்.

மேலும், மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் அகிலா கனகசூரியம் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும், அரசாங்க அதிபருமான மா.உதயகுமார் பிரதம அதிதியாக கலந்துகொண்டிருந்தார்.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்