பார்வையற்ற மாணவிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஜனாதிபதி!

Report Print Vethu Vethu in சமூகம்
109Shares
109Shares
lankasrimarket.com

உயர்தர பரீட்சையில் சிறந்த சித்திகளை பெற்ற மாணவிகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்துள்ளார்.

புத்தளம் - முந்தலம சிங்கள மகா வித்தியாலயத்தில் சிறப்பான பெறுபேறுகளை பெற்ற இரு பார்வையற்ற மாணவிகளையே ஜனாதிபதி சந்தித்துள்ளார்.

கடந்த வருடம் உயர் தர பரீட்சையில் கலை பிரிவில் பரீட்சை எழுதி, 3 ஏ மற்றும் 3 பி சித்திகளை பெற்ற இந்த மாணவிகள் பல்கலைக்கழக வாய்ப்பை பெற்றுள்ளனர்.

புத்தளம், மதுரன்குளிய பிரதேசத்திற்கு சென்ற ஜனாதிபதியை சந்திப்பதற்கு மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதற்கமைய அந்த கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் ஜனாதிபதி அந்த மாணவிகளை சந்தித்துள்ளார்.

பத்துல்ஓய, பின்கட்டிய பிரதேசத்தை சேர்ந்த பார்வையற்ற மாணவிகள் தொடர்பிலான தகவல்களை உடனடியாக ஜனாதிபதி செயலகத்திற்கு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி, அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்