கொழும்பு மயானத்திற்குள் நடந்த விபரீதம்!- ஒருவர் பலி - கல்லறைக்குள் அமானுஷ சக்தியா?

Report Print Vethu Vethu in சமூகம்
730Shares
730Shares
ibctamil.com

கொழும்பின் புறநகர் பகுதியான பிலியந்தலையில் மயானத்திற்குள் மர்மான முறையில் விபத்து ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பட்டுவந்தர பொது மயானத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மூவர் காயமடைந்துள்ளனர்.

இந்த அனர்த்தம் நேற்று மாலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கல்லறையில் சடலம் ஒன்றை புதைப்பதற்காக குழி தோண்டும் போது அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

அந்த இடத்தில் நின்ற லொரி ஒன்றை நபர் ஒருவர் ஓட்ட முயற்சித்துள்ளார். இதன்போது லொரியை கட்டுப்படுத்த முடியாமல் விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்த 4 பேர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 65 வயதான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எனினும் கல்லறையில் உள்ள அமானுஷ சக்தியின் காரணமாக இந்த அனர்த்தம் ஏற்பட்டிருக்கலாம் என காயப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்