இலங்கையில் ஆதிக்கம் செலுத்தும் சீன நிறுவனங்கள்!

Report Print Murali Murali in சமூகம்
123Shares
123Shares
ibctamil.com

சீன அரசாங்கத்துக்குச் சொந்தமான, 62 நிறுவனங்கள் இலங்கையில் முதலீடுகளைச் செய்திருக்கின்றன அல்லது வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள சீன வங்கியின் (Bank of China) முகாமையாளர் சுவான் வொங் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

“குறித்த 62 சீன அரசு நிறுவனங்களில் 26 நிறுவனங்கள் தமது பிராந்திய தலைமையகங்களை இலங்கையிலேயே அமைத்துள்ளனர். இதன் காரணமாக தெற்காசியாவில் எமது தலைமையகங்களில் ஒன்றாக இலங்கையை தெரிவுசெய்துள்ளோம்.

இந்த கிளை மாலைதீவு, பங்களாதேஷ், நேபாளம் போன்ற நாடுகளில் உள்ள எமது கிளைகளின் வணிக நடவடிக்கைகளைக் கவனிக்கும்.

மூலோபாய அமைவிடம், பொருளாதார முன்னேற்றம், மற்றும் ஏனைய கவரும் தன்மைகளால், எதிர்காலத்தில் வெளிநாட்டு முதலீடுகளைக் கவரும் இடமாக இலங்கை மாறும்.

கொழும்பில் எமது கிளையை திறக்கும், பிராந்திய தலைமையகத்தை அமைக்கும் முடிவில் அதுவும் செல்வாக்கு செலுத்தியிருப்பதாக” அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்