பாண்டியன்குளம் மகாவித்தியாலயத்தின் பொன்விழா தொடர்பான கலந்துரையாடல்

Report Print Yathu in சமூகம்
45Shares
45Shares
ibctamil.com

முல்லைத்தீவு - பாண்டியன்குளம் மகாவித்தியாலயத்தின் பொன்விழா தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று நேற்று நடைபெற்றுள்ளது.

முல்லைத்தீவு, துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட 1ஏபி பாடசாலையாக காணப்படுகின்ற முல்லைத்தீவு பாண்டியன்குளம் மகாவித்தியாலயம் கடந்த 1966ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகின்றது.

இந்த பாடசாலையில் பொன்விழா எதிர்வரும் ஜுன் மாதம் 28ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இது தொடர்பாக பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் ஆகியோருடனான கலந்துரையாடல் ஒன்று நேற்று பிற்பகல் பாடசாலை மண்டபத்தில் பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்றுள்ளது.

இதில் பொன்விழா தொடர்பான நூல் வெளியீடு மற்றும் பொன்விழா தொடர்பான வேலைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்