உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் நடைபெற்ற பேரணிகள்

Report Print Yathu in சமூகம்
41Shares
41Shares
ibctamil.com

உலகளாவிய ரீதியில் இன்று உலக சுற்றாடல் தினம் கொண்டாடப்படுகின்றது. இதை முன்னிட்டு நாட்டின் பல பாகங்களிலும் விழிப்புணர்வு பேரணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

கிளிநொச்சியில்...

உலக சுற்றாடல் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு கிளிநொச்சியில் விழிர்ப்புணர்வு பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட அலுவலகத்தின் ஏற்பாட்டில் இன்று காலை 10 - 11 மணிவரை, கிளிநொச்சி மத்திய கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வினை தொடர்ந்துஅங்கிருந்து கிளிநொச்சி டிப்போச் சந்தி வரை மாணவர்கள் ஊர்வலமாக சென்றனர்.

இதில், “பிளாஸ்ரிக் பாவனை அற்ற வளம் நிறைந்த நாட்டை உருவாக்குவோம், நாளைய பொழுது நமக்காய் மலர நாமெல்லாம் இணைந்து சூழலைக் காப்போம்” போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை ஏந்தி பேரணியில் கலந்துகொண்டனர்.

இந்த விழிப்புணர்வு பேரணியில் பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள், மாவட்ட அலுவலகர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

குறித்த நிகழ்வை மத்திய சுற்றாடல் அதிகார சபையின் வடக்கு மாகாண அலுவலகமும்,மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சும் ஏற்பாடு செய்திருந்தன.

கிளிநொச்சி செய்திகள் - யது மற்றும் சுமன்

மன்னாரில்...

மன்னார் சமாதான அமைப்பின் ஏற்பாட்டில் உலக சுற்றாடல் பாதுகாப்பு தினவிழிர்ப்புணர்வு நிகழ்வு இன்று காலை 10 மணியளவில் மன்னார் அரச பேருந்து தரிப்பிடத்தில் இடம்பெற்றது.

மன்னார் சமாதான அமைப்பின் தலைவர் பி.ஏ.அந்தோனி மார்க் தலைமையில் இடம்பெற்றகுறித்த விழிர்ப்புணர்வு நிகழ்வில் மன்னார் சர்வோதைய அமைப்பின் மாவட்ட இணைப்பாளர் எஸ்.யுகேந்திரன், மன்னார் நகரசபை உறுப்பினர் என்.நகுசீன், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது விழிர்ப்புணர்வு நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் பல்வேறு வசனங்கள்எழுதிய பதாதைகளை ஏந்தியவாறு மக்களுக்கு உலக சுற்றாடல் பாதுகாப்பு தினம்தொடர்பில் விழிர்ப்புணர்வை ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் செய்திகள் - ஆஷிக்

முல்லைத்தீவில்...

உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு முல்லைத்தீவு நகரில் இன்று கவனயீர்ப்பு பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட மத்திய சுற்றாடல் அதிகாரசபை மற்றும் வலயகல்வி பணிமனை, இலங்கை செஞ்சிலுவை சங்க முல்லைத்தீவு மாவட்ட கிளையினர் இணைந்து கவனயீர்ப்பு பேரணி ஒன்றினை இன்று காலை முல்லைத்தீவு நகரில் நடத்தியுள்ளார்கள்.

இதில் முல்லைத்தீவு நகரினை சேர்ந்த பாடசாலை மாணவர்களும் கலந்து கொண்டுள்ளார்கள்.

“மாற்றீடுகளை தேடுவோம், பொலித்தீன் பிளாரிக் பாவனையினை குறைப்போம்,” என்ற தொனிப்பொருளில் முல்லைத்தீவு மகாவித்தியாலய முன்றலில் ஆரம்பமான பேரணி முல்லைத்தீவு நகரினை சென்றடைந்தது.

பின்னர், பொதுச்சந்தை வழியாக மீண்டும் சுற்றுவட்டம் ஊடாக நகரை அண்மித்த பகுதியில் வந்தடைந்து கோவில் குடியிருப்பு பகுதியில் உள்ள வீதி மற்றும் அதனை அண்டிய பகுதிகளை சுத்தப்படுத்தியுள்ளார்கள்.

முல்லைத்தீவு செய்திகள் - மோகன்

வவுனியாவில்...

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் மரக்கன்றுகள் நாட்டி வைக்கப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்ட செயலகம், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புக்குழு என்பன இணைந்து குறித்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் வாசஸ்தலத்தில் இன்று காலை 9.30 மணியளவில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப்பணிப்பாளர் எஸ். சூரியகுமார் தலைமையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் விதான பத்திரன, மேலதிக அரசாங்க அதிபர் த.திரேஸ்குமார், வவுனியா பிரதேச செயலாளர் கா. உதயராசா, செட்டிகுளம் பிரதேச செயலாளர் எஸ். சிவகரன் மாவட்ட திட்டப்பணிப்பாளர், மாவட்ட கணக்காய்வாளர், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், வவுனியா வளாக பல்கலைக்கழக இரண்டாம் வருட மாணவர்கள், மாணவிகள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் எனப்பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

அத்துடன், பல்கலைக்கழக மாணவர்கள் “பிளாஸ்ரிக் மாசடைதலை இல்லாது ஒழிப்போம்” எனினும் பொருளில் விழிப்புணர்வு கருத்துரைகளை வழங்கியிருந்தார்கள். இவ்வருடம் இலங்கையில் உலக சற்றாடல் தினம் “பிளாஸ்ரிக் மாசடைதலை இல்லாது ஒழிப்போம்” எனினும் தொனிப் பொருளில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வின் இறுதியில் அரசாங்க அதிபர் வாசஸ்தலத்தின் வளாகத்தில் அதிதிகள், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்களினால் மரக்கன்றுகள் நாட்டி வைக்கப்பட்டது.

வவுனியா செய்திகள் - சதீஸ்

அம்பாறையில்..

சர்வதேச சுற்றாடல் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு கல்முனை மாநகரசபையின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட சூழல் சுத்தப்படுத்தல் நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றது.

மருதமுனை கடற்கரை மற்றும் சிறுவர் பூங்கா பகுதிகளில், மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் இந்த செயற்றிட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தின் சுற்றுநிரூபத்திற்கு அமைய கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரின் பணிப்புரையின் பேரில் இந்த சூழல் சுத்தப்படுத்தல் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அம்பாறை செய்திகள்- நேசன்

வவுனியா நெடுங்கேணியில்..

வவுனியா வடக்கு நெடுங்கேணி பகுதியில் இன்றைய தினம் உலக சுற்றாடல் தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

பேருந்து நிலையத்தில் காலை 10 மணியளவில் வன இலாகா திணைக்களத்தின் ஏற்பாட்டில் வன அதிகாரி கே.கே. நாணயக்கார தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

வன இலாகா திணைக்களம் மற்றும் பிரதேச செயலகம் ஆகியன இணைந்து குறித்த நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தன.

இதன்போது, சுற்றாடல் மாசாகுதல் தொடர்பான விசேட கருத்துக்கள் கலந்து கொண்ட அதிதிகளினால் பகிர்ந்து கொள்ளப்பட்டதுடன், பேருந்து நிலையப்பகுதிகளில் மரக்கன்றுகளும் நாட்டி வைக்கப்பட்டுள்ளன.

மேலும், இந்நிகழ்வில் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் க. பரந்தாமன் வடமாகாண சபைஉறுப்பினர் ஜி.ரி. லிங்கநாதன், வவுனியா வடக்கு பிரதேச சபைத் தவிசாளர்தணிகாசலம், உப தவிசாளர் யோகராஜா, நெடுங்கேணி வட்டார பிரதேச சபை உறுப்பினர்சத்தியநாதன், நெடுங்கேணி தலைமை பொலிஸ் உத்தியோகத்தர் சமந்த ரத்நாயக்கநெடுங்கேணி கிராம அலுவலகர் சுபாஸ், வவுனியா மாவட்ட வன அதிகாரி கே. கே.நாணயக்கார, மேலதிக மாவட்ட வன அதிகாரி ஆர். ரவிராஜ், நெடுங்கேணி வட்ட வனஅதிகாரி லலித் தனசேன, மேலதிக மாவட்ட வன அதிகாரி குமார ஜீவ, நெடுங்கேணிமகாவித்தியாலய மாணவர்கள், ஆசிரியர்கள், இலங்கை வங்கி முகாமையாளர் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

வவுனியா நெடுங்கேணி செய்திகள்- தீசன்

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்