யாழ். பொதுநூலகம் எரிக்கப்பட்டு 37வது ஆண்டு நினைவுதினம்

Report Print Sumi in சமூகம்
58Shares
58Shares
ibctamil.com

யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்பட்டு இன்று 37வது ஆண்டு நினைவுதினம் அனுஸ்டிக்கப்பட்டது.

யாழ்.மாநகர சபையின் ஏற்பாட்டில், பிரதம நூலகர் சுகந்தி சற்குணராஜா தலைமையில் இன்று காலை இந்த நினைவுதினம் அனுஷ்டிக்கப்பட்டது.

இதன்போது, யாழ்.நூலகம் எரிவதை கண்டு உயிரிழந்த அருட்தந்தை தாவீது அடிகளாரின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்தும், சுடரேற்றியும் அஞ்சலி செலுத்தினார்கள்.

இந்த நினைவஞ்சலி நிகழ்வில், யாழ். மாநரக முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் மற்றும் வடமாகாண அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம், வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன், வடமாகாண சபை உறுப்பினர். எம்.கே.சிவாஜிலிங்கம்? வடமாகாண எதிர்க்கட்சி தலைவர் சின்னத்துரை தவராசா, மற்றும் வடமாகாண சபை உறுப்பினர், பா.கஜதீபன் உட்பட யாழ்.பொதுநூலக உத்தியோகத்தர்கள், பணியாளர்கள் எனப்பலர் கலந்து கொண்டிருந்தனர்.

1998ஆம் ஆண்டு ஜூன் மாதம் 01ஆம் திகதி அரச படைகளினால் எரியூட்டப்பட்ட போது, இலட்சக்கணக்கான புத்தகங்கள் தீக்கிரையாக்கப்பட்டதுடன், இனப்படுகொலை செய்யப்பட்ட நாள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்