வவுனியாவில் பொருட்களின் விலையேற்றத்திற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்

Report Print Theesan in சமூகம்

எரிபொருட்களின் விலையேற்றம், அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்திற்கு எதிராக நாளை மறு நாள் வவுனியாவில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டம் நாளை மறுநாள் காலை 10.30 மணியளவில் சமூக விழிப்புணர்வுக்கான மக்கள் அமைப்பினரால் வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

மேலும், இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், மக்களைப் பசியில் தள்ளும் அரசுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்கவும், மக்கள் அதிகாரங்களை நிலை நிறுத்த அனைத்து மக்களையும் இன, மத, பேதமின்றி இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிணையுமாறு சமூக விழிப்புணர்வுக்கான மக்கள் அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers