மட்டக்களப்பில் ஆலய உண்டியல் உடைக்கப்பட்டு கொள்ளை

Report Print Kumar in சமூகம்

மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் ஆலயம் ஒன்று உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு புதிய வன்னியனார் வீதியில் உள்ள மாமரத்தடி ஆஞ்சநேயர் ஆலயமே இன்று அதிகாலை உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஞ்சநேயர் ஆலயத்தின் கதவுகள் உடைக்கப்பட்டு அங்குள்ள ஆஞ்சநேயர் சுவாமி சிலையில் போடப்பட்டிருந்த நகைகள் மற்றும் ஊண்டியலில் இருந்த பணம் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது சுமார் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான நகைகள் கொள்ளையிடப்பட்டிருக்கலாம் எனவும் பெருமளவான பணமும் கொள்ளையிடப்பட்டிருக்கலாம் எனவும ஆலய பரிபாலனசபை உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

ஸ்தலத்திற்கு சென்ற மட்டக்களப்பு மாவட்ட குற்றதடவியல் பிரிவு பொலிஸார் மற்றும் மட்டக்களப்பு பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டனர்.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers