மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக விளையாட்டு போட்டி

Report Print Kumar in சமூகம்

மண்முனை, தென் எருவில் பற்று பிரதேச செயலகமும் கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களமும் இணைந்து நடத்திய கிராம உத்தியோகத்தர் பிரவுகளுக்கிடையிலான விளையாட்டு விழா நேற்றைய தினம் இடம்பெற்றது.

தோற்றாத்தீவு வெற்றி விநாயகர் விளையாட்டு கழகத்தின் பொது விளையாட்டு மைதானத்தில், மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரெத்தினம் தலைமையில் குறித்த நிகழ்வு நடைபெற்றது.

பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்களுக்கிடையிலான பல்வேறு விளையாட்டுக்கள் இதன்போது நடைபெற்றன.

குறித்த விளையாட்டு நிகழ்வின்போது, மட்டு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார், மட்டு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த், பல திணைக்களங்களின் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers