கிழக்கு முன்பள்ளி ஆசிரியர்களின் பரிதாபநிலை

Report Print V.T.Sahadevarajah in சமூகம்

கிழக்கு மாகாணத்தில் 56,152 சிறுவர்களுடன் இயங்கும் 1834 முன்பள்ளிகளில் கடமையாற்றும் 3357 ஆசிரியர்களுக்கு இவ்வருத்தில் இருந்து, கடந்த நான்க மாத காலமாக மாதாந்த கொடுப்பணவு வழங்கப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குறித்த ஆசிரியர்களுக்கு மாதாமாதம் வழங்கப்பட்டு வந்த 3,000 ரூபா கொடுப்பணவு இவ்வருடம் இதுவரை வழங்கப்படாமையினால் அவர்கள் மிகவும் பரிதாப நிலைக்கு உள்ளாகியிருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் குறித்த ஆசிரியர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,

இன்றைய வாழ்க்கைச் செலவுக்கு இது கிஞ்சித்தும் போதாது என்பதற்கு அப்பால் அந்த தொகை கூட இதுவரை வழங்கப்படவில்லை என்பது கவலைக்குரியது.

கிழக்கு மாகாண சபையினால் கடந்த வருடம் வழங்கப்பட்டு வந்த 3000 ரூபா கொடுப்பனவு தற்போது நிறுத்தப்பட்டுள்ள அதேவேளை வடக்கு மாகாணசபை 6000 ரூபாவை தொடர்ந்தும் வழங்கி வருகின்றது.

கிழக்கில் இடைநிறுத்தப்பட்டுள்ள இம் மாதாந்த கொடுப்பனவை இம்மாதத்திலிருந்தாவது வழங்க மாகாண பிரதம செயலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், இக்கொடுப்பனவு 10 ஆயிரம் ரூபா வரையிலாவது அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers