கிளிநொச்சியில் இடம்பெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள்

Report Print Suman Suman in சமூகம்

கிளிநொச்சியில் மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் இடம்பெற்றுள்ளன.

குறித்த போட்டி நிகழ்வுகள் கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலய மைத்தானத்தில் இன்று காலை நடைபெற்றுள்ளன.

இதன்போது, சுவட்டு நிகழ்வுகள் மற்றும் ஒரு காலினை இழந்தவர்களுக்கான சைக்கிள் ஓட்டப்போட்டிகள் என்பன நடத்தப்பட்டுள்ளன.

நிகழ்வில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா ஆகிய மூன்று மாவட்டங்களிலும் உள்ள மாற்றுத் திறனாளிகள், மாற்றுத் திறனாளிகள் விளையாட்டு உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்