கிழக்கு மண்ணின் இளம் விஞ்ஞானிக்கு தேசிய விருது

Report Print Dias Dias in சமூகம்

கல்முனை, பாண்டிருப்பைச் சேர்ந்த, இலங்கை சட்டக்கல்லூரி மாணவனான தெய்வநாயகம் மதிவதன் என்ற இளம் விஞ்ஞானிக்கு தேசிய விருது கிடைத்துள்ளது.

ஆயிரம் படைப்புக்கள் என்ற புத்தாக்க போட்டியில், மாவட்ட மட்டம், மாகாண மட்டம், தேசிய மட்டம் வரையிலும் அவரது கண்டுபிடிப்புக்கள் தெரிவாகியுள்ளதோடு, அவருக்கு தேசிய விருதும் கிடைக்கப்பெற்றுள்ளது.

Hybrid Power system என்ற மின்னேற்றக்கூடிய வகையில் குறித்த கண்டுபிடிப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது ஒரு மடிக்கணணி மின்கலத்தினை எடுத்து அதில் உள்ள மின்சாரம், மின்னழுத்தம் என்பவற்றினை 3V ,6v ,9v 12v என்ற அடிப்படையில் மின்சாரத்தினை பிரித்து அதன் மூலம் எமக்கு தேவையான மின்சாரத்தின் அளவினை பயன்படுத்தி camera , sumart phone, portable fan, charger, light, searching light, warning tune போன்றவற்றினை மின்னேற்ற கூடிய வகையிலும், வீட்டு மின்சாரம் தடைபடும சந்தர்ப்பத்திலும், சுற்றுலா பிரயாணங்களின் போதும் தங்களது மின் சாதனங்களை மின்னேற்றி பாவிக்க கூடிய வகையில் அதி உயர் அழுத்தம் கொண்ட {220v ,50hz } மின்சாரத்தினை பாவிக்க கூடிய வகையில் இதை உருவாக்கியுள்ளார்.

அத்துடன். இவரது அடுத்த கண்டுபிடிப்பாக கை ஊனமுற்றோர் computer இயக்கும் முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காலினை பயன்படுத்தி computer இயக்குவதாகும். {Hand Disable Peoples Using computer}

அத்துடன், ஒளிரும் பற்தூரிகை மற்றும் {lighting tooth brush} , multi switching sestem போன்ற விடையங்களை இவர் கண்டு பிடித்துள்ளார் அது மட்டும் அல்லாது இலங்கை அடிப்படை சட்டங்களை வாசிக்கும் ரோபோ {robot } தயாரிக்கும் முயற்சிலும் இவர் ஈடுபட்டுள்ளார்.

இவருடைய தந்தை தெய்வநாயகம் {ஒய்வு நிலை கிராம உத்தியோகத்தர்} அவரது கண்டுபிடிப்பு, ஆராய்ச்சி என்பவற்றிக்கு ஊக்குவிப்பது, அதற்கான நிதி உதவிகளை கொடுத்து உதவுவதும் அவரது தந்தையே.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்