யாழ். பட்டதாரிகளுக்கு நேர்முகத் தேர்வு!

Report Print Sumi in சமூகம்

யாழ். மாவட்டத்திலுள்ள பட்டதாரிகளுக்கான நேர்முகப் பரீட்சை எதிர்வரும் 18 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதனைக் குறிப்பிட்டார்.

எதிர்வரும் 18 ஆம் திகதி நடைபெறவுள்ள இந்த நேர்முகப்பரீட்சை யாழ்.மாவட்ட செயலத்தில் நடைபெறவுள்ளது. மாவட்ட செயலகத்தில் பதிவினை மேற்கொண்டவர்களும், அல்லது தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சில் பதிவுகளை மேற்கொண்டவர்களும் இந்த நேர்முகத் தேர்வில் தோற்ற முடியும்.

நேர்முகத் தேர்விற்கான கடிதங்கள் இதுவரையில் கிடைக்காதவர்கள் கூட பதிவினை மேற்கொண்டு, நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளமுடியும்.

பதிவுகளை மேற்கொள்ளாத பட்டதாரிகளோ எவரும் எந்தவித பதற்றமும் அடைய வேண்டிய தேவை இல்லை. யாழ்.மாவட்ட செயலகம் மற்றும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சு ஆகிய இரு இடங்களில் தமது பதிவுகளை மேற்கொள்ளத் தவறிய பட்டதாரிகள் எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு முன்னர் தமது பதிவுகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், இதுவரையும் மூவாயிரத்து நானூற்றி அறுபத்து மூன்று பட்டதாரிகள் பதிவினை மேற்கொண்டுள்ளதாகவும், பதிவினை மேற்கொண்டவர்களுக்கு, வழங்கிய அட்டவணையின் பிரகாரம் நேர்முகத் தேர்விற்கான திகதிகள் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுவரையில் பதிவினை மேற்கொள்ளாதவர்கள் எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு முன்னதாக பதிவினை மேற்கொள்ளுமாறும், பதிவினை மேற்கொள்பவர்களுக்கு நேர்முகத்தேர்விற்கான பிறிதொரு திகதி வழங்கப்படுமென்றும் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers