பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களின் வேலை நிறுத்தம் முடிவு

Report Print Aasim in சமூகம்

பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் தங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

மேலதிக கொடுப்பனவாக வழங்கப்படும் தொகையை பத்துவீதத்தால் அதிகரித்து வழங்க வேண்டுமென்ற கோரிக்கை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கல்வி சாரா ஊழியர்கள் தங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

இந்நிலையில் உயர்கல்வி அமைச்சு அவர்களின் மேலதிக கொடுப்பனவை அதிகரித்து வழங்குவதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து வேலைநிறுத்தப் போராட்டம் இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளது.

எதிர்வரும் 17ம் திகதி தொடக்கம் தங்கள் கடமைகளுக்குத் திரும்பவுள்ளதாக பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

கடந்த ஒன்றரை மாதகாலமாக மேற்கொள்ளப்பட்டு வந்த கல்வி சாரா ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக பல்கலைக்கழகங்களின் நிர்வாக செயற்பாடுகள் பெரும் தடங்கல்களை எதிர்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers