மாணவர்களின் பாவனைக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கி வைப்பு

Report Print Theesan in சமூகம்

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் ஆரம்பப்பிரிவு மாணவர்களின் பாவனைக்கு குடிநீர் சுத்திகரிக்கும் இயந்திரம் வழங்கி வைக்க்பட்டுள்ளது.

குறித்த இயந்திரம் காலைப் பிரார்த்தனையின் போது பாடசாலையின் முதல்வர் தா.அமிர்தலிங்கம் தலைமையில் மாணவர்களின் பாவனைக்கு வழங்கி வைக்கப்பட்டது.

தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் பழைய மாணவரும், முல்லைத்தீவு பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளருமான ந.ஸ்ரீஸ்கந்தராசாவின் நிதி உதவியில் இந்த இயந்திரம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் பாடசாலையின் உப அதிபர் க.முல்லைக்குமரன், ஆரம்பப்பிரிவு பிரதி அதிபர் ஞானமதி மோகனதாஸ், பாடசாலையின் பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers