சிறப்பாக இடம்பெற்ற வருடாந்த கலாச்சார விழா

Report Print Suman Suman in சமூகம்

கண்டாவளை கலாச்சார பேரவையினால் நடத்தப்பட்ட வருடாந்த கலாச்சார விழா சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு இன்று கண்ணகிநகர் ஆலய மண்டபத்தில் பிரதேச செயலர் கோ. நாகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் காத்தவராயன் கூத்து, கர்நாடக சங்கீதம், நடனம் மற்றும் பாரம்பரிய கலை நிகழ்வுகள் என்பன இடம்பெற்றதோடு, உள்ளுர் எழுத்தாளர்கள் ஆக்கங்களை கொண்டமைந்த வலை ஓசை நூலும் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தெரிவு செய்யப்பட்ட சிறந்த கலைஞர்களுக்கு விருதுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிகழ்வில் வடக்கு மாகாண முன்னாள் கல்வி கலாச்சார அமைச்சர் த.குருகுலராஜா, கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், மாவட்ட மேலதிக அரச அதிபர் சி. சத்தியசீலன், கரைச்சி பிரதேச செயலர் த.முகுந்தன், பளை பிரதேச செயலர் ப.ஜெயராணி வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் அபிராமி, கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் குயின்ரஸ் மற்றும் கலைஞர்கள், பொது மக்கள் என கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers