சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சியில் பல்வேறு நிகழ்வுகள்

Report Print Yathu in சமூகம்

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவு சபை மண்டபத்தில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

குறித்த நிகழ்வு அமைச்சர் அனந்தி சசிதரன் தலைமையில் இன்று முற்பகல் 9.30 மணியளவில் நடைபெற்றுள்ளது.

வடமாகாண மகளிர் விவகார சமூக சேவைகள் கூட்டுறவு அமைச்சும் அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள் இணைந்து இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளது.

இதன்போது, கிளிநொச்சியில் அமைந்துள்ள பழைய மாவட்டச் செயலகத்தின் முன்பாக விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

நிகழ்வில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதி, வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த பெண்கள் மற்றும் பெண்கள் அமைப்புக்கள், வெளிமாவட்டங்களைச் சேர்ந்த பெண்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers