யாழில் இடம்பெற்ற சர்வதேச மகளிர் தின நிகழ்வு

Report Print Sumi in சமூகம்

'அவள் இல்லாத உலகம்' எனும் தொனிப்பொருளிலான சர்வதேச மகளிர் தின நிகழ்வு யாழில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு யாழ்.பிராந்திய இணைப்பாளர் தங்கவேல் கனகராஜ் தலைமையில் இன்று மாவட்ட செயலகத்தில் நடைபெற்றுள்ளது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட நிகழ்வில் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட்குரே சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளனர்.

நிலையான எதிர்காலத்திற்கு வலுவான பெண்கள் மற்றும் முறைசாரா பொருளாதார துறையிலுள்ள பெண்களை வலுவூட்டல் எனும் கோட்பாட்டிற்கு அமைவாக 2018ஆம் ஆண்டிற்கான சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டுள்ளது.

இதன்போது, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் முறைசாரா பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பு அடங்கிய நூல் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

இதன் முதற்பிரதியினை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் தங்கவேல் கனகராஜ் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட்குரேயிக்கு வழங்கி வெளியிட்டு வைத்துள்ளார்.

இதனை தொடர்ந்து, யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுகுணரதி தெய்வேந்திரம் மற்றும் வடமாகாண ஆளுநரின் செயலாளார் இ.இளங்கோவன், உள்ளிட்டோருக்கான சிறப்பு பிரதிகளும் வழங்கி வைக்கப்பட்டன.

மேலும், நிகழ்வில், மத தலைவர்கள், பொலிஸ் அதிகாரிகள், மகளிர் அமைப்புக்களைச் சேர்ந்த பெண்கள், சமூக ஆர்வலர்கள், பெண் தலைமைத்துவ பெண்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers