நாடு கடத்தப்படவுள்ள இலங்கை குடும்பம்! பிள்ளைகளுக்குக் கிடைத்த அதிர்ஷ்டம்!

Report Print Samy in சமூகம்
228Shares
228Shares
ibctamil.com

நியூசிலாந்தில் 8 வருடங்களாக வசிக்கும் இலங்கைக் குடும்பம் ஒன்று நாடு கடத்தலை எதிர்நோக்கியுள்ளது என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும் அந்தக் குடும்பத்திலுள்ள பிள்ளைகள், அங்கு பாடசாலை கல்வியைத் தொடர்வதற்கு நியூசிலாந்து அரசு நிதி உதவி வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது.

11, 10 மற்றும் 8 வயதுடைய பிள்ளைகள் குயின்ஸ்டவுன் முதன்மை பாடசாலையில் கல்வி கற்று வந்த திறமையான மாணவர்களாகும்.

2010 ஆம் ஆண்டு இந்தச் சிறுவர்களின் தாயார் தினேஷா அமரசிங்க, நியூசிலாந்தில் மருத்துவ மாணவியாக பதிவு செய்துள்ளார்.

அவருக்கு 10 ஆண்டு தொழில் அனுபவம் உள்ளதோடு, நியூசிலாந்தின் திறமையான புலம்பெயர்ந்தோர் பிரிவின் கீழ் 2011ஆம் ஆண்டு முதல் ஆக்லாந்தில் சமையல் கலைஞராக பணியாற்றியுள்ளார்.

2011 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், இந்த குடும்பம் குயின்ஸ்டவுனுக்கு மாற்றப்பட்டது, அங்கு பிரபலமான உணவகத்தில் தினேஷா சமையல் கலைஞராக பணியாற்றி வந்துள்ளார்.

அவரது நுழைவிசைவில் கணவருக்கு திறந்த பணி செய்ய அனுமதி வழங்கப்பட்டது. அதற்கமைய அவர் ப்பர் மார்க்கெட்டில் பணி புரிந்ததோடு, சாரதியாகவும் செயற்பட்டு வந்துள்ளார்.

2014 ஆம் ஆண்டு தினேஷா தவறி விழுந்தமையால் அவரது இடுப்பு பகுதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவரது காலில் வலி ஏற்பட்டமையால் சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் இருந்த போதிலும், அவர் தொடர்ந்து பணி செய்து வந்துள்ளார்.

2015 ஆம் ஆண்டு மே மாதம் அவரது தனது மூளையை பரிசோதித்து பார்த்த போது அவர் ஸ்களீரோசிஸ் (sclerosis) எனப்படும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த ஒக்ரோபர் மாதம் தினேஷாவினால் பணி புரிய முடியவில்லை என்பதால், அவரது திறமையான தொழிலாளிக்கான தற்காலிக நுழைவிசைவு நிராகரிக்கப்பட்டது.

இதனால் அவரது கணவரால் இனி வேலை செய்ய முடியாது எனக் கூறப்பட்டதுடன், அவர்களது குடும்பம் கடந்த நவம்பர் 21 ஆம் திகதி நியூசிலாந்திலிருந்து வெளியேற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு சட்ட சிக்கல்கள் காரணமாக அவர்கள் 2013 ஆம் ஆண்டு விண்ணப்பித்த நிரந்தர நுழைவிசைவு தாமதமாகியதாகக் கூறப்பட்டது.

இவ்வாறான நிலையில் அந்தக் குடும்பத்தினர் தொடர்ந்து அங்கு தங்குவதற்கு மனிதாபிமான முறையீடு ஒன்றை மேற்கொண்டுள்ள நிலையில், தற்போது அதன் முடிவிற்காக காத்திருக்கின்றனர் என்றும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்