மனைவி வெள்ளை ஆகாமையால் கணவனின் முடிவு! குழப்பத்தில் பொலிஸார்

Report Print Vethu Vethu in சமூகம்
1829Shares
1829Shares
lankasrimarket.com

கணவன் - மனைவியின் முரண்பாடு காரணமாக பொலிஸார் குழப்ப நிலை அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பல வருடங்களின் பின்னர் மனைவியின் நிறம் குறித்து வருத்தமடைந்த கணவன் பொலிஸாரின் உதவியை நாட்டியுள்ளார்.

மனைவியை விவகாரத்து செய்யும் நோக்கில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்படடுள்ளது. இந்தச் சம்பவம் தம்புத்தேகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

கடந்த 5 வருடங்களாக திருமண வாழ்க்கையில் இணைந்திருந்த குறித்த கணவர், தற்போது விவகாரத்து பெற்றுக்கொள்ள முயற்சித்துள்ளார்.

கணவன், மனைவி இருவரையும் அழைத்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர். இதன்போது மனைவி வெள்ளையாக இல்லை என்பதால் அவரிடம் இருந்து பிரிய விரும்புவதாக கணவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது கணவர் இதுவரை காலமும் தன்னுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்ததாகவும், சில காலங்களுக்கு முன்னர் வேறு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளதாகவும் மனைவி குறிப்பிட்டுள்ளார்.

இதனால் தான் கணவனை விட்டு பிரியப்போவதில்லை எனவும், தான் ஒருபோதும் கணவனுக்கு விவகாரத்து வழங்கப்போவதில்லை எனவும் மனைவி குறிப்பிட்டுள்ளார்.

இருவரையும் சமாதானப்படுத்தவதற்கு பொலிஸ் அதிகாரிகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் கணவர் அதற்கு இணங்கவில்லை.

இந்த குடும்ப பிரச்சினை தொடர்பில் சரியான தீர்வினை வழங்குவதில் தம்புத்தேகம பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழப்பம் அடைந்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்