நடிகை ஷோபனா முதல் பிரியங்கா வரை! தொடரும் தற்கொலையால் அதிர்ச்சியில் திரையுலகம்

Report Print Raju Raju in சினிமா

பிரபல சீரியல் நடிகையான பிரியங்காவின் தற்கொலை தான் தற்போது திரையுலகிலும், சீரியல் உலகிலும் பரபரப்பாக பேசப்படுகிற விடயமாக இருக்கிறது.

ஒரு நடிகரோ அல்லது நடிகையோ தற்கொலை செய்வது என்பது இங்கு புதிய விடயமல்ல!

மன அழுத்தம், பணப்பிரச்சனை, காதல் தோல்வி என பல்வேறு காரணங்களுக்காக இதற்கு முன்னர் பல நடிகர்/நடிகைகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

நடிகை ஷோபனா

நகைச்சுவை நடிகர் வடிவேலுவுடன் பல திரைப்படங்களிலும், நடிகர் வெண்ணிறாடை மூர்த்தியுடன் மீண்டும் மீண்டும் சி‌ரிப்பு என்னும் தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் நடித்து பிரபலமடைந்த நடிகை ஷோபனா 2011ஆம் ஆண்டில் காதல் தோல்வி காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.

நடிகர் சாய் பிரசாந்த்

ஏராளமான டிவி சீரியல்களிலும் ஐந்தாம் படை போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ள நடிகர் சாய் பிரசாந்த் 2016-ல் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். சாவதற்கு முன்னர் என் மரணத்திற்கு நானே பொறுப்பு என கடிதம் எழுதி வைத்து விட்டு தன் உயிரை மாய்த்து கொண்டார்.

நடிகை வைஷ்ணவி

சீரியல் நடிகை வைஷ்ணவி கடந்த 2006ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் இறந்த இரண்டாவது நாளில் இவரது மறைவுக்கு காரணமான சீரியல் நடிகர் தேவ் ஆனந்த் கைது செய்யப்பட்டார்.

நடிகர் முரளி மோகன்

மின்னலே, பாய்ஸ் உள்பட பல படங்களிலும், டிவி தொடர்களிலும் நடித்த பிரபலமான நடிகர் முரளி மோகன் சினிமா, சீரியல் வாய்ப்புகள் கிடைக்காத விரக்தியில் கடந்த 2014 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார்.

நடிகை மயூரி

தமிழ் மற்றும் மலையாள நாடகங்களில் கலக்கிய நடிகை மயூரி சில படங்களில் மட்டுமே நடித்தார். வாழ்க்கையில் நம்பிக்கை இல்லாமல் போனதால் தற்கொலை செய்கிறேன் என கூறிவிட்டு கடந்த 2005ஆம் ஆண்டு மரணமடைந்தார்.

நடிகர் சாருகேஷ்

ரிதம் போன்ற திரைப்படங்களிலும் , சித்தி உட்பட பல சீரியல்களிலும் நடித்து பிரபலமடைந்த நடிகர் சாருகேஷ் கடன் தொல்லையால் கடந்த 2004 ஆண்டு ரயில் முன்னர் பாய்ந்து சென்னையில் தற்கொலை செய்து கொண்டார்.

மேலும் சினிமா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்