மன்னிப்புக் கேட்கும் கார்த்திக் சுப்புராஜ்

Report Print Trinity in சினிமா
281Shares
281Shares
ibctamil.com

மெர்குரி படம் தமிழ் நாட்டில் வெளியாகாத காரணத்திற்காக மன்னிப்பு கேட்டுள்ளார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.

வளர்ந்து வரும் இளம் இயக்குனர்களில் கார்த்திக் சுப்புராஜ் முதன்மையானவர். வித்யாசமான கதைக்களத்தையும் கதாபாத்திரங்களின் குணத்தையும் தனது மாறுபட்ட கோணங்கள் மூலம் அணுகுவதில் வல்லமையானவர் கார்த்திக் சுப்புராஜ். இவரது இறைவி படம் இதற்கு மிக சிறந்த உதாரணம்.

தனது சுய முயற்சியினால் நான்கு குறும்படங்கள் எடுத்த அனுபவம் வைத்து இவர் இயக்கிய அனைத்து திரைப்படங்களும் வெற்றி விழா கண்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இவரது அடுத்த படமான மெர்குரியை காண மக்கள் ஆவலாக காத்திருக்கையில் தமிழகத்தில் நடந்து வரும் சினிமா ஸ்ட்ரைக் காரணமாக மெர்குரி படம் தமிழகம் தவிர மற்ற பகுதிகளில் வெளியாகியிருக்கிறது.

தனது தாய் மண்ணில் வெளியிட முடியாமல் போனது குறித்து வருத்தம் தெரிவித்த கார்த்திக் சுப்புராஜ் வெகு விரைவில் தமிழ் சினிமாவில் நடக்கும் பிரச்னைகள் முடிவுக்கு வந்து விடும் , அதன் பின் மெர்குரி உங்கள் திரையரங்குகளில் வந்து விடும் என்றும் அதுவரை பைரஸி முறையில் இந்தப் படத்தை யாரும் பார்க்க வேண்டாம் என்றும் வேண்டிக் கொண்டிருக்கிறார்.

ஒரு திரைப்படம் வெளியாவதற்குப் பின்னால் உள்ள வலிகளைப் புரிந்து கொள்ளும் அவரின் ரசிகர்கள் நிச்சயமாக கார்த்திக் சுப்புராஜின் இந்த வேண்டுதலை நிறைவேற்றுவார்கள் என்றுதான் தோன்றுகிறது.

மேலும் சினிமா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்