நடிகர் விஜய்க்கு வில்லன் ஆன அரசியல்வாதி: யார் தெரியுமா?

Report Print Kabilan in சினிமா

நடிகர் விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் வில்லனாக அரசியல்வாதி பழ.கருப்பையா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் தற்போது தனது 62வது படத்தில் நடித்து வருகிறார். பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் இந்த படத்தில் வில்லனாக நடிக்க, அரசியல்வாதி பழ.கருப்பையா தெரிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

விவசாய பிரச்சனை குறித்த இந்த படத்தில், அவர் நிலச்சுவான்தாராகவும், அரசியல்வாதியாகவும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

பழ.கருப்பையா இதற்கு முன்பு, அங்காடி தெரு படத்தில் ரெங்கநாதன் தெருவில் துணிக்கடை நடத்தும் தொழிலதிபராக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சினிமா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்