ஆஸ்கர் விருதுகள்: இம்முறை எந்தெந்த நடிகர்களுக்கு தெரியுமா?

Report Print Harishan in சினிமா

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 90-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது.

சர்வதேச சினிமாத் துறையின் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவை பிரபல தொகுப்பாளர் ஜிம்மி கிம்மல் 2-வது முறையாக தொகுத்து வழங்குகிறார்.

ஹாலிவுட் மட்டுமல்லாது உலகின் பல்வேறு முக்கிய திரையுலக பிரபலங்களும் இந்த விழாவில் பங்கேற்றுள்ளனர்.

மொத்தம் 24 பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்படும் இந்த விழாவில் அதிகபட்சமாக தி ஷேப் ஆப் வாட்டர் என்னும் திரைப்படம் 13 பிரிவுகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ளது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விழாவில் விருது பெற்றவர்களின் விவரங்கள் வருமாறு:

 • சிறந்த துணை நடிகர்: சாம் ராக்வெல்(49), படம்: த்ரி பில்போர்ட்ஸ் சைட் எப்பிங் மிசவுரி
 • சிறந்த துணை நடிகை: ஆலிசன் ஜேனி, படம்: ஐ டான்யா
 • சிறந்த ஆடை வடிவமைப்பு: மார்க் பிரிட்ஜஸ், படம்: பாண்ட் த்ரட்
 • சிறந்த சிகை அலங்கார விருது: கஸூ ஹிரோ சுஜி, டேவிட் மலினவ்ஸ்கி, லுசி சிப்பிக்
 • சிறந்த ஒப்பனை- டார்க்கஸ் ஹவர் படத்தில் பணியாற்றிய மூன்று பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.
 • சிறந்த முழு நீள ஆவணப்படத்திற்கான ஆஸ்கர் விருதினை இகாரஸ் திரைப்படம் வென்றது.
 • சிறந்த ஒலி தொகுப்புக்கான ஆஸ்கர் விருதினை டன்கர்க் திரைப்படம் தட்டிச்சென்றது
 • 2-ஆம் உலகப்போர் பற்றிய இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனின் திரைப்படம் டன்கர்க்
 • சிறந்த ஒலி தொகுப்புக்கான விருது: அலெக்ஸ் கிப்ஸன், ரிச்சர்டுக்கு வழங்கப்பட்டது.
 • சிறந்த கலை இயக்குநர் - தி ஷேப் ஆப் வாட்டர்
 • சிறந்த ஒலி தொகுப்பு மற்றும் ஒலிக்கலவை ஆகிய 2 விருதுகளையும் டான்கர்க் திரைப்படம் தட்டியுள்ளது.
 • சிறந்த குறும்படம்: டியர் பேஸ்கட் பால்
 • சிறந்த வெளிநாட்டு மொழிப்படம்: ஏ ஃபெண்டாஸ்டிக் உமன்
 • சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்: பிளேடு ரன்னர் 2049 படம் தேர்வு
 • சிறந்த படத்தொகுப்புக்கான விருது: டன்கர்க்
 • சிறந்த குறும்படம்: தி சைலன்ட் சைல்ட், விருது பெற்றவர்- இயக்குநர் கிறிஸ் ஓவர்டன்
 • சிறந்த குறு ஆவணப்படம் - ஹெவன் இஸ் எ டிராபிக் ஜாம் ஆன் தி 405
 • சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு: தி ஷேப் ஆஃப் வாட்டர்
 • சிறந்த தழுவல் திரைக்கதைக்கான விருது: கால் மீ பை யுவர் நேம், திரைப்பட இயக்குநர் ஜேம்ஸ் ஐவரி விருதை பெற்றார்.
 • சிறந்த திரைக்கதை ஆசிரியர் விருது: கெட் அவுட் படத்துக்காக ஜோர்டன் பீலே பெற்றுள்ளார்.

  Sam Rockwell

மேலும் சினிமா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்