நித்யானந்தா பக்தர்களுக்கு எதிராக பிரபல நடிகர் காட்டமான ட்வீட்

Report Print Gokulan Gokulan in சினிமா
105Shares

ஆண்டாள் குறித்த சர்ச்சை விவகாரத்தில் நித்யானந்தா பக்தர்களை கடுமையாக விமர்சித்து டிவிட்டர் பக்கத்தில் நடிகர் பிரசன்னா பதிவிட்டுள்ளார்.

ஆண்டாள் பற்றி வைரமுத்து எழுதிய கட்டுரை பல சர்சைகளுக்கு வித்திட்டது இது தொடர்பாக இந்து அமைப்புகள் பல வைரமுத்துவுக்கு எதிராக போராட்டதில் இறங்கியது.

நான் ஆண்டாள் குறித்து தான் பேசியது யாரையும் புன்படுத்தி இருந்தால் அதுக்காக தான் வருத்தம் தெரிவிப்பதாக வைரமுத்து கூறியிருந்தார், இருப்பினும் நாள் தோறும் வைரமுத்துவை இந்து மத ஆதரவாளர்கள் தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சித்து வருகின்றனர்.

குறிப்பாக நித்தியானந்தா பக்தர்கள் வைரமுத்து பற்றி கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி வீடியோ பதிவிட்டுள்ளனர்.

அவர்களுக்கு எதிராக பிரசன்னா ட்வீட் செய்துள்ளார்

உண்மையில் நித்யானந்தா கூட்டம்தான் இந்துக்களை அசிங்கப்படுத்துகிறது அழிக்க வேண்டியதும் அவர்களை தான் என காட்டமாக பதிவிட்டுள்ளார்.

மேலும் சினிமா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்