எகிப்திய படத்தின் தழுவலா அருவி?

Report Print Subash in சினிமா

அருவி திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளிவந்து பலரது பாராட்டுகளை பெற்றுவருகிறது.

அடுத்த வருடத்தில் பல விருதுகள் இந்த படத்துக்கு குவியப்போகிறது என்று கூறும் நிலையில் ஒரு அதிர்ச்சியான செய்தி சமூகவலை தளத்தில் பரவிவருகிறது.

இப்படம் எகிப்து நாட்டில் அரபு மொழியில் வெளிவந்த 'அஸ்மா' என்ற படத்தின் தழுவல். இப்படத்தின் கதையும் அருவி படத்தின் களமும் கிட்டத்தட்ட அதே போன்றதுதான். .

நம்ம ஊரே கலாச்சாரத்துக்கு ஏற்றார் போல் பல மாற்றங்களை செய்து அற்புதமாக கொடுத்ததற்கு கண்டிப்பாக பாராட்டலாம்.

ஆனால் இந்த சர்ச்சைக்கு இயக்குனர் தான் பேசவேண்டும் என்று சமூகவலைத்தளத்தில் ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

மேலும் சினிமா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்