ரஜினியை முந்திய விஜய்: மெர்சல் படைத்திருக்கும் புதிய சாதனை

Report Print Kabilan in சினிமா

விஜய் நடித்துள்ள ’மெர்சல்’ திரைப்படம், ரஜினியின் ’கபாலி’ படத்தின் டீஸர் சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளது.

அட்லி இயக்கத்தில், விஜய் நடிப்பில் வெளியான ’மெர்சல்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதுடன் பல்வேறு சாதனைகளையும் படைத்து வருகிறது.

படத்தின் வசூல் 200 கோடியை தாண்டியதாக கூறப்படும் நிலையில் தற்போது, மற்றுமொரு சாதனையை ’மெர்சல்’ செய்துள்ளது.

அதாவது, ரஜினி நடிப்பில் வெளியான ’கபாலி’ படத்தின் டீஸரை இணையத்தில் 34,582,207 பார்வையாளர்களை பெற்று, அதிக பேரால் பார்க்கப்பட்ட டீஸர் என்ற சாதனையை தன்வசம் வைத்திருந்தது.

ஆனால், விஜய்யின் ’மெர்சல்’ டீஸர் 34,605,562 பார்வையாளர்களை பெற்றுள்ளதால் கபாலி டீஸரின் சாதனையை முறியடித்துள்ளது.

ஜி.எஸ்.டி குறித்த வசனங்கள், மருத்துவ துறை முறைகேடு உட்பட பல்வேறு பிரச்சனைகள் இந்த படத்தில் பேசப்பட்டன.

மேலும், பல சர்ச்சைகளில் சிக்கியதால் இந்திய அளவில் டிரெண்ட் ஆகி மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளது.

மேலும் சினிமா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers