தற்கொலைக்கு முயன்றேன்: பிரபல நடிகை ஓபன் டாக்

Report Print Kabilan in சினிமா

மன உளைச்சலின் காரணமாக தற்கொலைக்கு முயன்று அதிலிருந்து மீண்டதாக கூறியுள்ளார் நடிகை இலியானா.

தமிழில் கேடி, நண்பன் திரைப்படங்களில் நடித்தவர் இலியானா. பாலிவுட்டில் பர்ஃபி படத்தின் மூலம் அறிமுகமானவர், தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது, சில மாதங்களுக்கு முன்பு நான் மிகுந்த மன உளைச்சலில் இருந்தேன், அதனால் ஒரு கட்டத்தில் தற்கொலை செய்து கொள்ளலாமா என்று கூட நினைத்தேன்.

ஆனால், தற்கொலை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் சிலரின் உதவிகள் கிடைத்ததால் எனது மனநிலை மாறியது என தெரிவித்துள்ளார்.

மேலும் பல சமூக பணிகளில் ஈடுபடுவதோடு, மன உளைச்சலுக்கு ஆளாகும் பெண்களை அதிலிருந்து மீட்கும், விழிப்புணர்வு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சினிமா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்