படுகவர்ச்சியாக அதுல்யா: இயக்குனரின் விளக்கம்

Report Print Kabilan in சினிமா

சமீபத்தில் வெளியான ‘ஏமாலி’ திரைப்படத்தின் டீஸரில், கதாநாயகி அதுல்யா கவர்ச்சியாகவும், புகைப்பிடிக்கும் காட்சிகளும் இடம்பெற்றிருந்ததால் ரசிகர்கள் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.

’காதல் கண் கட்டுதே’ திரைப்படத்தின் மூலம் புகழ்பெற்றவர் நடிகை அதுல்யா. இவர் நடிப்பில் ஏமாலி என்னும் திரைப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியானது. முகவரி, தொட்டிஜெயா உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய வி.இசட்.துரை இதனை இயக்கியுள்ளார்.

படத்தின் டீஸரில், அதுல்யா நடித்துள்ள காட்சிகள் விமர்சனத்துக்கு உள்ளனதால் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டதோடு, அந்த காட்சிகளை படத்திலிருந்து நீக்க வேண்டும் என இயக்குனருக்கு வேண்டுகோள் விடுத்தார்.

இதற்கு விளக்கமளித்துள்ள இயக்குனர், இன்றைய இளைஞர்களின் காதலைப் பற்றி தான் படத்தில் கூறியிருக்கிறேன்.

பிரேக் அப், பார்ட்டி, டேட்டிங் ஆகிய விடயங்கள் படத்தில் இருப்பதாலேயே இது போன்ற காட்சிகளை வைத்துள்ளேன்.

தணிக்கைக் குழுவிற்கு படத்தினை காண்பித்த பிறகு அவர்கள் ஆட்சேபனை தெரிவித்தால் மட்டுமே அந்த காட்சிகளை நீக்குவேன்.

கதைக்கு முக்கியமான காட்சிகள் என்பதனால் அவர்கள் நீக்க மாட்டார்கள் என நம்புகிறேன். எனவே, இது குறித்து அதுல்யா வருத்தப்படவும், மன்னிப்பு கேட்கவும் தேவையில்லை என தெரிவித்துள்ளார்.

மேலும் சினிமா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்