ரஜினி பேசிய அரசியல் பேச்சு... சரியாக இருக்குமா? தனுஷ் ஓபன் டாக்

Report Print Santhan in சினிமா

நடிகர் ரஜினிகாந்த் எந்த முடிவு எடுத்தாலும் அது சரியாகத்தான் இருக்கும் என்று பிரபல திரைப்பட நடிகரும், அவருடைய மருமகனுமான தனுஷ் கூறியுள்ளார்

நடிகரான ரஜினிகாந்த் அண்மையில் தனது ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். அதன் பின் தனது அரசியல் பிரவேசம் குறித்து பேசினார்.

அப்போது அவர் தான் அரசியலுக்கு வந்தால் ஊழல்வாதிகளை அருகில் நிற்கவிடமாட்டேன் என்று கூறியிருந்தார்.

அவருடைய இந்த பேச்சுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் பலர் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அதுமட்டுமின்றி அவரை தங்களது கட்சியில் இணைத்துக் கொள்ள வேண்டும் அல்லது அவரது ஆதரவை பெற வேண்டும் என தமிழகத்தின் முன்னணி கட்சிகள் முயற்சி செய்து வருகின்றன.

இந்நிலையில் ரஜினிகாந்தின் மருமகனும், நடிகருமான தனுஷ் இது குறித்து கூறுகையில், அரசியல் என்று மட்டுமில்லாமல் வேறு எந்த முடிவை ரஜினிகாந்த் எடுத்தாலும், அது சரியாகவே இருக்கும். அவருடைய அரசியல் பேச்சினால் எங்கள் குடும்பத்திற்குள் எந்த வித அழுத்தமும் இல்லை என கூறியுள்ளார்.

மேலும் சினிமா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments