மஞ்சுவை விவாகரத்து செய்தது ஏன்? மனம் திறந்த திலீப்

Report Print Deepthi Deepthi in சினிமா

மலையாள பிரபல நடிகர் திலீப் தனது முதல் மனைவி மஞ்சு வாரியரை விவாகரத்து செய்து கொண்டது ஏன் என்பது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

நடிகர் திலீப்- மஞ்சு வாரியர் ஜோடி கடந்த 2014 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றுக்கொண்டனர்.

விவாகரத்து கிடைத்து 2 வருடங்களுக்கு பின்னர் நடிகர் திலீப், நடிகை காவ்யா மாதவனை மறுதிருமணம் செய்துகொண்டார்.

மஞ்சு வாரியர்- திலீப் உறவிலான விரிசலுக்கு காவ்யா மாதவன் தான் காரணம் என கூறப்பட்டது.

இந்நிலையில், தனது விவாகரத்து குறித்து திலீப் கூறியதாவது, நாங்கள் திருமணம் செய்துகொண்ட சந்தோஷமாக வாழ்ந்து வந்தோம். எங்கள் வாழ்க்கை இனிமையாக சென்று கொண்டிருந்தது.

ஆனால், 5 ஆண்டுகளுக்கு பின்னர் எங்கள் உறவில் விரிசல் ஏற்பட ஆரம்பித்தது.

விவாகரத்துக்கான காரணங்கள் குறித்து நீதிமன்றத்தில் நான் சமர்ப்பித்தவை அனைத்தும் என வாழ்க்கையின் கதைதான்.

எனது வாழ்நாளில் நான் பலபேர்களை நம்பியுள்ளேன். ஆனால் அவர்கள் அனைவரும் எனக்கு துரோகம் செய்துவிட்டனர். எனது விவாகரத்திற்கான காரணம் ஒருபோதும் வெளி உலகத்திற்கு வருவதை நான் விரும்பவில்லை.

எனது வாழ்வில் பல்வேறு பிரச்சனைகள் நடந்தும், எனது மகளின் எதிர்காலம் கருதி நான் மிகவும் அமைதியாக இருந்தேன்.

எனது குடும்பத்தில் நடைபெற்ற பல்வேறு பிரச்சனைகளுக்கும், காவ்யா மாதவனுக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது. ஆனால், அவருடைய பெயரும் தேவையில்லாமல் பேசப்பட்டது.

காவ்யா எனது தோழி ஆவார். எனக்கு விவாகரத்து நடைபெற்று 2 ஆண்டுகளுக்கு பின்னரே திருமணம் செய்து கொள்ளும் முடிவு எடுக்கப்பட்டு, நான் காவ்யாவை திருமணம் செய்துகொண்டேன் என கூறியுள்ளார்.

மேலும் சினிமா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments