நிகழ்ச்சியை ரத்து செய்தார் ரஜினிகாந்த்: ஏன்? பரபரப்பு விளக்கம்

Report Print Raju Raju in சினிமா

ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்து கொள்வதாக ரஜினிகாந்த் கூறியிருந்த நிலையில் அந்த நிகழ்ச்சியை தற்போது ரத்துச் செய்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 2008 ஆம் ஆண்டு வரை தனது ரசிகர்களை வருடம் தோறும் சந்தித்து புகைப்படம் எடுத்து கொள்வார்.

பின்னர் சில காரணங்களுக்காக ரஜினி தனது ரசிகர்களை 2008க்கு பின்னர் சந்திக்கவில்லை.

இந்நிலையில், வரும் 12ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை ரஜினிகாந்த் சென்னையில் தனது ரசிகர்களை சந்திப்பார் என அறிவிப்பு வெளியானது.

தற்போது திடீரென ரசிகர்களை சந்திக்கும் நிகழ்ச்சியை ரத்து செய்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இது குறித்து ரஜினி சார்பில் வெளியாகியுள்ள அறிக்கையில், ஒரு நாளைக்கு 1500 - 2000 பேர் அழைத்து அவர்களுடன் புகைப்படம் எடுத்து, விருந்து கொடுத்து அனுப்பலாம் என்பது விருப்பமாக இருந்தது.

ஆனால் 2000 பேருடன் தனித்தனியாக போட்டோ எடுப்பது கடினம், இதனால் இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்படுகிறது.

விரைவில் மாவட்டம் வாரியாக ரசிகர்களை ரஜினி சந்திப்பது குறித்தான அறிக்கை வெளிவரும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் சினிமா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments