வேறொரு பெண்ணுடன் தொடர்பு...ஏமாற்றி விட்டார்: கதறும் மைனா நந்தினி

Report Print Santhan in சினிமா

சின்னத்திரை நடிகையான மைனா நந்தினியின் கணவர் கார்த்திக் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில் நந்தினி கார்த்திக் பற்றி சில தகவல்களை கூறியுள்ளார்.

அதில், கார்த்திக் மத்திய அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி பலபேரிடம் 80 லட்சம் ரூபாய் வரை பணம் வாங்கியிருந்தார்.

ஆனால் அவர்களுக்கு இவர் வேலையும் வாங்கித்தரவில்லை, அவர்களிடம் வாங்கிய பணத்தையும் இவர் கொடுக்கவில்லை.

இதனால் பணம் கொடுத்தவர்கள் என்னிடம் வந்து கேட்ட போது தான் இதை பற்றி எனக்கு தெரியவந்தது.

இது குறித்து அவரிடம் பேசிய போது, கார்த்திக் தற்கொலை செய்துக்குவேன்'னு சொல்லி மிரட்டிட்டே இருந்தாரு.

இதனால எங்கப்பா, அம்மா பேசி, எங்க வீட்டுக்கே என்னைக் கூட்டிட்டு வந்திட்டாங்க.

அவருக்கு ஏற்கெனவே ஒரு பொண்ணுடன் தொடர்பு இருந்து அந்தப் பொண்ணு தற்கொலை செய்திடுச்சு. அதனால அவரை பொலிஸ் கைது பண்ணிட்டாங்க.

ஆனா இந்த விஷயத்தை யார்கிட்டயும் சொல்லாம, அவர் துபாய்க்குப் போயிருக்கார் னு எல்லோர்கிட்டயும் சொல்லியிருந்தேன்.

மூன்று மாதமா எனக்குள்ளேயே புதைச்சு வெச்சிருந்த விஷயமெல்லாம், இன்னைக்கு வெளியே தெரியுற அளவுக்கு அவரே செஞ்சுட்டாரு.

எனக்கு நகை வாங்கித்தரன்னு சொல்லி 20 லட்சம் வாங்கினாரு, ஆனா இதுவரை நகை வரவில்லை, இதை யாரிடமும் சொல்லக்கூடாது என்று கூறினார்.

சமீபத்துல நிறையப் பேரு கொடுத்த பணத்தைக் கேட்டு தொந்தரவு செஞ்சதால அவரு மன உளைச்சல்ல இருந்தாரு.

அதனால அடிக்கடி அவரை சந்திச்சு, சமாதானப்படுத்தி ஆறுதல் சொல்லிட்டுதான் இருந்தேன்.

எல்லா பிரச்னையும் சரி பண்ணிட்டு வா, நாம சேர்ந்து வாழ்வோம்'னு சொன்னேன். அதுமட்டுமில்லாம, நான் சம்பாதிக்கிற பணத்தை எங்க வீட்டுக்குத் தெரியாம, அவருக்குக் கொடுத்துட்டு இருந்தேன்.

ஆனா நேத்து விருகம்பாக்கத்துல ஒரு ஹோட்டல்ல ரூம் போட்டு, அங்க தற்கொலை செய்துகிட்டாரு. நான் சூட்ல இருந்தப்போ, கார்த்திக் தற்கொலை செய்துகிட்டதா தகவல் வந்துச்சு.

அவர் இந்த மாதிரி அடிக்கடி சொல்லி மிரட்டியிருக்காரு. அதுமாதிரியே இதுவும் பொய்யாதான் இருக்கணும்னு கடவுளை வேண்டிட்டு போனேன்.

நாங்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். ஆனால் அவர் என் அன்பைவிட, என் பணத்தைதான் எதிர்பார்த்திருக்காருனு புரிஞ்சது.

இப்பவும் அவரை காதலிச்சுட்டுதான் இருக்கேன். என்னோட லவ் உண்மையானது. அவர் தவறானவர் என்று தெரிஞ்சும், பொலிசில் புகார் கொடுக்கல.

என் கார்த்திக் இறக்கவில்லை, அவனைப் பாக்குற தைரியம் இல்லாம உடைஞ்சுபோனேன். நடந்தது கனவா இருக்கக் கூடாதானு மனசு அழுதுட்டே இருக்கிறேன் என்று கூறியுள்ளார் மைனா நந்தினி.

மேலும் சினிமா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments