மைனா நந்தினியின் கணவர் தற்கொலை: யார் காரணம்? பரபரப்பு கடிதம் சிக்கியது

Report Print Santhan in சினிமா

பிரபல சின்னத்திரை நடிகையான நந்தினியின் கணவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சின்னத்திரை கலைஞர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகையான நந்தினி வம்சம், கேடி பில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இருப்பினும் இவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்தது சரவணன் மீனாட்சி தொடர் தான். அதில் மைனா கேரக்டரால் அனைவரது மனதிலும் நீங்கா இடம் பிடித்தார்.

அதன் பின்னர் மைனா நந்தினி என்று அழைக்கப்பட்டார். நந்தினி கடந்த ஆண்டு கார்த்திகேயன் என்பவரை திருமணம் செய்து கொண்டார், இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இதைத் தொடர்ந்து இருவரும் சென்னையில் உள்ள வளசரவாக்கத்தில் வசித்து வந்தனர்.

கருத்து வேறுபாடு - பிரிந்து வாழ்ந்தனர்

திருமணமாகியவுடன் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணாமாக பிரிந்து வாழ்ந்து வந்தாக கூறப்படுகிறது.

இதனால் மனம் உடைந்து போன கார்த்திக் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளார்.

உடற்பயிற்சி கூடத்தை கூட சரிவர நடத்த முடியாமல் வேறு ஒருவருக்கு விற்று விட்டதாக கூறப்படுகிறது.

மன அழுத்தத்திற்காக நேற்று முன்தினம் கார்த்திக்கை அவரது தாய் கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை பெற்று விட்டு வீட்டிற்கு இருவரும் திரும்பியுள்ளனர்.

மன அழுத்தத்தால் பாதிப்பு

அப்போது மாலையில் தனது நண்பரை பார்த்து விட்டு வருவதாக கூறி கார்த்திக் அவரது தாயிடம் கூறி விட்டு சென்று விட்டார்.

இரவு நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வரவில்லை, மேலும் செல்போனும் எடுக்காததால் சந்தேகம் அடைந்த அவரது தாய், கார்த்திக் தங்கியிருந்த லாட்ஜூக்கு சென்றார். அப்போது அவர் தங்கியிருந்த அறையின் கதவை தட்டி உள்ளனர்.

நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்து லாட்ஜ் ஊழியர்களை அழைத்துள்ளனர். அப்போதும் கதவு திறக்காததால் விருகம்பாக்கம் பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் அந்த அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது கார்த்திக் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து பாத்ரூமில் தற்கொலை செய்து கொண்டபடி இறந்தநிலையில் இருப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து பொலிசார் கார்த்திக் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலை கடிதம் சிக்கியது

மேலும் கார்த்திக் எழுதிய கடிதம் ஒன்றும் சிக்கி உள்ளதாகவும், அதில் தனது தற்கொலைக்கு நந்தினியின் தந்தைதான் காரணம் என்றும், அக்கா, அம்மாவை நன்றாக பார்த்துக்கொள் என்று எழுதி இருந்ததாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

நந்தினியே காரணம்

கார்த்திக் அவரது மனைவி நந்தினி விவாகரத்துகோரி தொல்லை கொடுத்ததே தற்கொலைக்கு காரணம் என, கார்த்திக்கின் சகோதரி ரம்யா தெரிவித்தார்.

மேலும் சினிமா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments