சமந்தா இறந்ததை பார்த்து கண்ணீர் விட்டு கதறிய காதலன்

Report Print Aravinth in சினிமா
3155Shares

பிரபல நடிகை சமந்தா தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வந்து கொண்டிருக்கிறார்.

இவர் தனது ரசிகர்களுடன் டுவிட்டர் பக்கத்தில் உரையாடும் பழக்கம் கொண்டவர். அப்பொழுதும் புது புது சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொள்வார்.

இந்நிலையில், தற்போது அதி சுவாரஸ்ய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதாவது, சமீபத்தில், சமந்தா நடிகர் விஜய்யுடன் இணைந்து நடித்து வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் தெறி.

இந்த படத்தை சமந்தாவும், அவருடைய காதலர் நாக சைத்தன்யாவும் சேர்ந்து தியேட்டரில் பார்த்துள்ளனர்.

அப்போது, படத்தில் ஒரு காட்சியில், சமந்தா இறந்து போவதாக அமைக்கப்பட்டிருக்கும்.

இந்த காட்சியை பார்க்கும் பொழுது நாக சைத்தன்யா தியேட்டரில் வைத்தே கண்ணீர் விட்டு அழுததாக கூறியுள்ளார்.

இது ஒருபுறமிருக்க, சமீபத்தில் நடிகை சமந்தா தனது வீட்டு வேலைக்காரர்களிடம் கடுமையாக நடந்து கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அதற்கு காரணம், அவர் வீட்டில் வைத்திருந்த விலையுயர்ந்த மோதிரம் அண்மையில் காணாமல் போய்விட்டதாம், மோதிரத்தை எங்கு தேடியும் கிடைக்கவில்லையாம்.

இதனால் ஆத்திரமடைந்த அவர் தன் வீட்டில் இருக்கும் யாராவது ஒருவர் தான் எடுத்திருக்க வேண்டும் என்று சந்தேகித்துள்ளார்.

ஆனால் அனைவரையும் கூப்பிட்டு விசாரித்தால் தப்பாகி விடுமே என்பதால், தன் உதவியாளர் உட்பட அனைவரையும் வேலையில் இருந்து நீக்கவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் சினிமா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments