நடிகர் விஜய் சேதுபதியின் படத்தை பார்த்துவிட்டு மு.க.ஸ்டாலின் அனுப்பிய உருக்கமான கடிதம்

Report Print Peterson Peterson in சினிமா

விஜய் சேதுபதி நடிப்பில் சீனு ராமசாமி இயக்கிய ‘தர்மதுரை’ படம் பார்த்துவிட்டு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரான மு.க ஸ்டாலின் ஒரு உருக்கமான பாராட்டு கடிதத்தை அனுப்பியுள்ளார்.

இயக்குனர் சீனு ராமசாமிக்கு அனுப்பிய அக்கடிதத்தில், ‘கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிதைகளில், யுவன்சங்கர் ராஜாவின் இசையிலான ‘ஆண்டிப்பட்டி கணவாய் காத்து ஆளைத் தூக்குதே’ என்ற பாடலும் இசையும் இதயத்தில் இன்னிசை பாடிக்கொண்டே இருக்கிறது.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் ஆகிய பொறுப்புகளை ஏற்று அற்புதமான ‘தர்மதுரை’ திரைப்படத்தை உருவாக்கியவர் சீனு ராமசாமி என பாராட்டிய மு.க ஸ்டாலின், மென்மேலும் சமூக சீர்த்திருத்தப் படங்களை அளிக்குமாறு அக்கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் சினிமா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments