படுக்கையறை காட்சியில் நெருக்கம்! விளக்கம் அளித்த ரன்பீர் கபூர்

Report Print Aravinth in சினிமா

முன்னாள் உலக அழகியும், பிரபல பாலிவுட் நடிகையுமான ஐஸ்வர்யா ராய்யுடனான நெருக்கமான காட்சிகள் குறித்து எழுந்த சர்ச்சை பேச்சுக்கு நடிகர் ரன்பீர் கபூர் விளக்கமளித்துள்ளார்.

சமீபத்தில் வெளியாகிய ஏ தில் ஹை முஷ்கில் என்ற படத்தின் மூலம் நீண்ட இடைவெளிக்கு பின் திரையுலகில் காலடி எடுத்து வைத்துள்ளார் ஐஸ்வர்யா ராய். இந்த படத்தின் கதாநாயகனாக ரன்பீர்கபூர் நடித்துள்ளார்.

இந்நிலையில், இப்படத்தில் ஐஸ்வர்யா ராயுடன் ரன்பீர் கபூர் நெருக்கமாக உள்ளது போன்ற காட்சிகள் படம் வெளியாவதற்கு முன்னதாகவே வைரலாக பரவி மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது.

மேலும், இருவரும் நெருக்கமாக இருக்கும் படுக்கையறை காட்சி படத்தின் கதைக்கு அவசியம் எனக்கூறி ஐஸ்வர்யாராயே பரிந்துரை செய்ததாக கூறப்பட்டு வந்த நிலையில், ரன்பீர் கபூர் சமீபத்தில் ரேடியோ ஒன்றுக்கு அளித்த பேட்டியில் முதலில் ஐஸ்வர்யா ராயை தொட்டு நடிக்க தயக்கமாக இருந்தது.

ஆனால் ஐஸ்வர்யா ராய் தான் தயக்கம் இன்றி நடிக்குமாறு கூறி எனக்கு ஊக்கமளித்தார். இப்படி ஒரு வாய்ப்புக்காகத் தான் காத்திருந்தேன், வாய்ப்பு கிடைத்தது அதில் சிக்சர் அடித்துவிட்டேன் என்று சர்ச்சைக்குரிய வித்தத்தில் பேசியது எரிகிற தீயில் எண்ணெயை ஊற்றியது போல் அமைந்தது.

இதைத் தொடர்ந்து, தனது சர்ச்சை பேச்சுக்கு விளக்கமளித்த ரன்பீர் கபூர் நான் அளித்த பேட்டி மிகவும் தவறான அர்த்தத்தில் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது.

நான் பேசியதற்கான விளக்கம் வேறு விதமானது. ஐஸ்வர்யா ராய் மிகச் சிறந்த நடிகை மட்டும் அல்ல, என் குடும்ப நண்பர். அனைவராலும் மதிக்கப்படக்கூடியவர்.

‘‘ஏ தில் ஹை முஷ்கில்’’ படத்தில் அவரது பங்களிப்பிற்கு நான் எப்போதும் கடமைப்பட்டவனாக இருப்பேன், நான் ஒருபோதும் அவரை அவமதிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும் சினிமா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments