பிரபல நடிகையை கட்டி பிடிக்க முயற்சி செய்த ரசிகர்கள்

Report Print Santhan in சினிமா

டோனி பட நாயகியான தீஷா பதானியை ரசிகர்கள் சிலர் கட்டிபிடிக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.

இந்தி கிரிக்கெட் வீரர் டோனியின் வாழ்க்கை குறித்து சித்தரித்து வெளிவந்த படம் தான் எம்.எஸ்.டோனி தி அண்டோல்டு ஸ்டோரி. இப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் திஷா பதானி.

இவர் ஹைதராபாத்தில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றிற்கு திறப்பு விழாவிற்கு வரவிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனால் அவரை காண்பதற்காக அப்பகுதியில் ரசிகர்கள் குவிந்தனர்.

திறப்பு விழாவிற்கு வந்த திஷா பதானி காரை விட்டு கீழே இறங்கிய போது ரசிகர்கள் அனைவரும் அவரிடம் ஆட்டோகிராப் வாங்க முயற்சித்துள்ளனர்.

இதனால் ஆட்டோ கிராப் போட முயற்சித்த போது ரசிகர்கள் கூட்டம் அலை மோதியதால், ஒரு சிலர் இதை பயன்படுத்தி நடிகையின் கையை பிடித்து இழுத்துள்ளனர்.

அதன் பின்னர் அவர் கொண்டுவந்திருந்த பையை அபகரிக்க முயற்சி செய்துள்ளனர். மேலும் சிலர் அவரை கண்ட இடங்களில் கிள்ளியும், கட்டி பிடிக்கவும் முயற்சி செய்துள்ளனர், இதனால் அவருக்கு சிறிதாக காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அருகே இருந்த பொலிசார் அவர்கள் அனைவரையும் விரட்டி அடித்து நடிகை தீஷா பதானியை மீட்டனர்.

மேலும் சினிமா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments