கபாலி படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்ப்பதற்காக ஜப்பானிலிருந்து அவரது ரசிகர்கள் சென்னை வந்து அமர்களப்படுத்தியுள்ளனர்.
கபாலி திரைப்படம் இன்று வெளியான நிலையில் தமிழகம் மட்டுமின்றி அமெரிக்கா, மலேசியா, கனடா என தமிழர்கள் வாழும் நாடுகளிலும் தியேட்டர்கள் களைகட்டியது.
இன்னும் சொல்லப்போனால் தலைவரின் ஜப்பான் ரசிகர்கள் சென்னைக்கே படையெடுத்து வந்து படம்பார்த்துள்ளனர்.
சென்னை காசி தியேட்டருக்கு வந்த ஜப்பான் ரசிகர் கூறுகையில், கபாலி படம் பார்ப்பதற்காக ஜப்பானில் இருந்து வந்துள்ளோம், ரொம்ப சந்தோசம், ரொம்ப மகிழ்ச்சி, ஜப்பானில் ரஜினி ரசிகர் மன்றத்தில் 500க்கும் அதிகமானோர் இருக்கிறோம்.
நாங்கள் சிலர் கபாலி பார்க்க வந்திருக்கிறோம். ரஜினியின் ஸ்டைல், ஆக்ஷன் எங்களுக்கு ரொம்பவே பிடிக்கும் என்று தெரிவித்துள்ளனர்.