எச்சரிக்கை! ப்ளோரன்ஸ் சூறாவளிக்கு சிக்கும் ஆயிரக்கணக்கான கனேடியர்கள்

Report Print Gokulan Gokulan in கனடா

அமெரிக்காவை அச்சுறுத்தும் அதிபயங்கரமான ஃபுளோரன்ஸ் புயலால் ஆயிரக்கணக்கான கனேடியர்களை பாதிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடக்கு அட்லாண்டிக் கடலில் உருவாகி வரும் ஃப்ளோரன்ஸ் சூறாவளியை எதிர்கொள்ள அமெரிக்காவின் கிழக்கு கரையோர மக்கள் தயாராகி வருகின்றனர்.

இதன் காரணமாக தென் கரோலினா, வடக்கு கரோலினா மற்றும் வெர்ஜினியா கிய பகுதிகளைச் சேர்ந்த 1.7 மில்லியன் மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், இந்த புளோரன்ஸ் சூறாவளிக்கு ஆயிரக்கணக்கான கனேடியர்கள் பாதிக்கப்படலாம் என Global Affairs Canada தெரிவித்துள்ளது.

அவற்றுள் முதல் கட்டமாக 440 கனடியர்கள் புயலால் பாதிக்கப்படலாம் என தங்கள் பகுதிகளில் பதிவு செய்துள்ளதாகவும், 3446 பேர் சூறாவளி Mangkhut-னால் பாதிக்கப்படலாம் என பதிவு செய்துள்ளனர்.

இதனைதொடர்ந்து அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதிக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறு கனடியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers