புதிய கனடிய $10 தாளில் கௌரவிக்கப்பட்ட பெண்: யார் இவர்?

Report Print Mohana in கனடா

நோவ ஸ்கோசியாவில் கறுப்பு இன மக்களிற்காக முன்னின்று போராடி சிறை சென்ற வயலா டெஸ்மொன்ட் என்பவர் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட புதிய கனடிய 10டொலர்கள் தாளில் இடம் பெற்று கௌரவிக்கப்பட்டுள்ளார்.

செங்குத்தான இப்பணத்தாளை ஹலிவக்ஸ் மத்திய நூலகத்தில் நிதி அமைச்சர் பில் மொர்னெயு மற்றும் கனடா வங்கியின் கவர்னர் Stephen Poloz வியாழக்கிழமை வெளியிட்டனர்.

டெஸ்மனின் சகோதரி வான்டா றொப்சனிற்கு கௌரவம் வழங்கப்பட்டது.

2018ன் பிற்பகுதியில் புழக்கத்திற்கு வர உள்ளது.

1946 நவம்பர் 8 டெஸ்மன்ட் கனடாவின் மனித உரிமைகள் இயக்கத்தில் ஒரு விந்தையான பங்கு வகித்தார். இவரது கார் திருத்தப்பட்டு கொண்டிருந்த காரணத்தால் இவர் நியு கிளாஸ்கோ, நோவ ஸ்கோசியா. றோஸ்லான்ட் தியேட்டரில் படம் பார்க்க சென்றுள்ளார்.

32வயதான டெஸ்மொன்ட் பொலிசாரால் தியேட்டரில் இருந்து வெளியே இழுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.காரணம் "whites only" -வெள்ளையர் மட்டும்-பிரிவில் அமர்ந்தமையால். அக்கால கட்டத்தில் கறுப்பு இனத்தவர் பல்கனியில் மட்டும் தான் அமர முடியும்.

சிவில் உரிமை ஆர்வலரான இவர் ஒரு சதத்திற்காக ஏமாற்றினார் என குற்றம் சாட்டப்பட்டது. மேல் மாடிக்கும் கீழ் மாடிக்குமான வரி வித்தியாசம் ஒரு சதமாகும்.

20-டொலர்கள் அபராதம் மற்றும் 6-டொலர்கள் நீதி மன்ற செலவு ஆகிய தொகையை செலுத்திய பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.

அண்மைக்காலங்கள் வரை இவரது சிரமமான முயற்சிகள் சிறிதளவு கவனத்தை ஈர்ந்து வந்தன. இவரது மரபு அங்கீகரிக்கப்பட்டு வந்தன.

இவரது பெயர் ஹலிவக்ஸ் துறைமுக படகு, ஒரு கனடா போஸ்ட் முத்திரை, மொன்றியல் வீதிகள் மற்றும் இவரை கௌரவ படுத்தும் முகமாக ஹலிவக்ஸ் மற்றும் ரொறொன்ரோவில் பூங்கா ஒன்று போன்றனவற்றிற்கு இவரது பெயரை வைத்தல் போன்ற செயற்பாடுகள் மூலம் கௌரவப்படுத்தப்பட்டு வருகின்றது.

அன்றாடம் புழக்கத்தில் இருக்கும் வங்கி தாள் ஒன்றில் முதன் முதலாக கறுப்பு இனம்-மற்றும் அரச-குடும்பம் சாராத பெண் தோன்றுவதும் இதுவாகும்.

டெஸ்மன்ட் 1965ல் காலமானார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers