கனடாவில் வீட்டில் இறந்துகிடந்த 31 வயது பெண்! கைது செய்யப்பட்டுள்ள 26 வயது இளைஞன்... வெளியான புகைப்படம்

Report Print Raju Raju in கனடா
0Shares

கனடாவில் 31 வயது பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞனை பொலிசார் கைது செய்துள்ளனர்.

ரொறன்ரோவில் தான் இந்த கொலை சம்பவம் கடந்த வியாழன் அன்று நடந்துள்ளது. கனடாவின் நார்த் பே நகரை சேர்ந்தவர் St. Jean (31). இவர் சில காலமாக ரொறன்ரோவில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த வியாழன் அன்று St. Jean படுகாயங்களுடன் உயிருக்கு போராடுவதாக பொலிசாருக்கு தகவல் வந்தது.

அங்கு பொலிசாரும் அவசர உதவி குழுவினரும் சென்ற நிலையில் அவரின் உயிரை காப்பாற்ற முடியவில்லை,

இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் St. Jean கொலை வழக்கில் Soreeysa Abdi (26) என்ற இளைஞனை கைது செய்துள்ளனர்.

இருவரும் ஒரே அடுக்குமாடி வீட்டில் வசித்து வந்ததும் அவர்களுடன் மற்றொரு பெண் ஒருவர் வசித்ததும் தெரியவந்துள்ளது.

மேலும் கைது செய்யப்பட்ட Soreeysa Abdi மீது ஏற்கனவே போதை மருந்துகள் தொடர்பாக வழக்கு இருப்பதும் அவர் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியில் வந்திருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து கொலை குறித்து விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் அது தொடர்பிலான தகவல்கள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்