முள்ளிவாய்க்காலில் இடிக்கப்பட்ட நினைவுச் சின்னத்துக்கு பதிலாக நான் ஒன்றை கட்டித் தருகிறேன்... வாக்கு கொடுத்துள்ள பிரபலம்

Report Print Balamanuvelan in கனடா
0Shares

முள்ளிவாய்க்காலில் இடிக்கப்பட்ட நினைவுச் சின்னத்துக்கு பதிலாக, தான் ஒரு நினைவுச் சின்னத்தை அமைத்து தருவதாக கனடா மேயர் ஒருவர் வாக்களித்துள்ளார்.

இலங்கையில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடிக்கப்பட்ட விடயம் கனடா வாழ் தமிழ்ச் சமூகத்தில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

2019ஆம் ஆண்டு, இலங்கை உள்நாட்டுப்போரில் உயிரிழந்த தமிழர்களின் நினைவாக, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுச் சின்னம் இரண்டு வாரங்களுக்கு முன் இடிக்கப்பட்டது.

அந்த சம்பவம் உலக முழுதும் வாழும் தமிழர்களை கொதிப்படையச் செய்தது. ஆகவே, ப்ராம்ப்டன் மேயரான Patrick Brown, தமிழ்ச் சமூகம் கனடாவுக்கு செய்துள்ள நல்ல விடயங்களுக்கு பதில் செய்யும் வகையில், இடிக்கப்பட்ட நினைவுச் சின்னத்திற்கு பதிலாக கனடாவில் ஒரு நினைவுச் சின்னத்தை அமைத்துத் தர இருப்பதாக அறிவித்துள்ளார்.

இன்று, ப்ராம்ப்டன் நகர கவுன்சில் இலங்கையில் இடிக்கப்பட்ட நினைவுச் சின்னத்திற்கு பதிலாக கனடாவில் ஒரு நினைவுச் சின்னத்தை அமைத்துத் தருவதற்கு ஆதரவாக ஏக மனதாக வாக்களித்துள்ளது.

இலங்கையில் நடந்த வரலாற்றை மூடிமறைக்க சிலர் முயலும் நிலையில், நாம் அதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கமுடியாது என்றார் Brown.

இலங்கையில் அவர்கள் நினைவுச் சின்னம் ஒன்றையும் வரலாற்றையும் இடிக்கும்போது, கனடாவில் நாம் அதற்கு எதிரானதொன்றை செய்வோம், உயிரிழந்தவர்கள் நினைவாக நாம் கனடாவில் ஒரு நினைவுச் சின்னத்தை உருவாக்குவோம் என்றார் அவர்.

அந்த அறிவிப்பை வெளிட்டதைத் தொடர்ந்து, தான் எடுத்துள்ள இந்த முடிவுக்கு பலத்த ஆதரவு கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார் Brown.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்