கனடாவில் வாழும் இந்த இந்தியரை கொள்ளையடித்தார்கள்... பதிலுக்கு அவர் கொடுத்தது தண்டனை அல்ல: ஒரு நெகிழவைக்கும் செய்தி

Report Print Balamanuvelan in கனடா
1139Shares

கனடாவில் இந்திய உணவகம் ஒன்றை துவங்கிய மிதுன் மேத்யூ, தான் கஷ்டப்பட்டு சேமித்த பணத்தில் ட்ரக் ஒன்றை வாங்கினார்.

கேரளாவில் பிறந்தவரான மேத்யூ அந்த ட்ரக்கை ஒரு நடமாடும் உணவகமாக்க திட்டம் வைத்திருந்தார்.

ஒருநாள் தன் ட்ரக் அருகே சிலர் கூடியிருப்பதைக் கண்ட மேத்யூவுக்கு முதலில் சந்தேகம் வரவில்லை என்றாலும் பிறகு அதை சோதித்தபோது, ட்ரக்கிலிருந்த எரிவாயு சிலிண்டர்கள் முதல் முக்கியமான பல பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்ததைக் கண்டார் அவர்.

பிப்ரவரியில் ஹொட்டல் ஆரம்பித்து, கொரோனாவால் தொழில் பாதிக்கப்பட்டு, பின்னர் மீண்டும் மீண்டு வர முயற்சிக்கும்போது, முக்கியமான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தால் யாருக்கும் கோபம்தான் வரும்.

Zach Goudie/CBC

ஆனால், இப்படியும் ஒரு மனிதர் இருப்பாரா என எண்ணவைக்கிறது மேத்யூ செய்த செயல். தான் கொள்ளையடிக்கப்பட்ட நிலைமையிலும், உணவுக்கு கஷ்டப்படுவோருக்கு இலவச உணவு வழங்கத் தொடங்கியுள்ளார் அவர்.

முதலில் மாணவர்களுக்கு, அடுத்து குறைந்த வருவாய் உள்ள மக்கள், பிறகு வீடில்லாதவர்கள் என தொடர்கிறது மேத்யூவின் சேவை.

அவர்களுக்கு உணவு இல்லாததால்தானே திருடினார்கள், உணவு கிடைத்தால் திருடமாட்டார்கள் அல்லவா? என்று கேட்கும் மேத்யூ, யாருக்குத் தெரியும், நாளை எல்லோரும் நல்ல நிலைக்கு வந்தபின், அவர்கள் என் வாடிக்கையாளர்களாகக்கூட வாய்ப்பிருக்கிறது என்கிறார்.

Zach Goudie/CBC

எங்களுக்கு உணவு இருக்கிறது, எங்களுக்கு உணவு கொடுத்த நாட்டுக்கு நான் எதையாவது செய்யவேண்டும், ஆகவே நான் அவர்களுக்கு இலவசமாக உணவு கொடுக்கிறேன் என்கிறார் மேத்யூ.

கொள்ளை குறித்து பேசும்போது அவரது குரலில் கோபத்தையோ, இலவச உணவு கொடுப்பது குறித்து பேசும்போது அவரது குரலில் பெருமையையோ காண்முடியவில்லை, ஒரே மாதிரி இருக்கிறார் மேத்யூ. தொடரட்டும் அவரது சேவை!

Zach Goudie/CBC
Zach Goudie/CBC)
You May Like This Video

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்