கனடாவில் 763 வைரங்கள் பதித்த தங்கப்பறவையை திருடிச்சென்ற நபர்கள்: அதன் மதிப்பு என்ன தெரியுமா?

Report Print Balamanuvelan in கனடா
454Shares

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில், 763 வைரங்கள் பதித்த தங்கப்பறவை ஒன்று கொள்ளையடிக்கப்பட்டது.

Ron Shore என்பவர் அந்த தங்கப்பறவையை தனது காரில் ஏற்றும்போது, மர்ம நபர்கள் இருவர் தன்னை தலையில் தாக்கிவிட்டு, அந்த பறவையை பிடுங்கிச் சென்றுவிட்டதாக புகாரளித்திருந்தார்.

அத்துடன், அந்த தங்கப்பறவை Lloyd's என்ற காப்பீட்டு நிறுவனத்தில் காப்பீடு செய்யப்பட்டிருந்ததால் இழப்பீடு கோரியிருந்தார் Ron.

நீதிமன்றமும் இழப்பீடு வழங்கவேண்டும் என Lloyd's நிறுவனத்திற்கு உத்தரவிட்டிருந்தது.

ஆனால், இழப்பீடு வழங்க மறுத்த Lloyd's நிறுவனம், அந்த தங்கப்பறவைக்கு பாதுகாப்பாக எப்போதும் அதனுடன் இரண்டு பாதுகாவலர்கள் இருக்கவேண்டும் என்பது உட்பட காப்பீட்டு நிறுவனத்தின் கொள்கைகளை Ron மீறிவிட்டதாக வாதிட்டது.

Photo: CTV News

எட்டு கிலோ எடையுள்ள, 763 வைரங்கள் பதிக்கப்பட்ட அந்த தங்கப் பறவையின் மதிப்பு 930,000 டொலர்கள் என மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், வழக்கு பிரிட்டிஷ் கொலம்பியா உச்ச நீதிமன்றத்தை அடைய, வழக்கை விசாரித்த நீதிமன்றம், காப்பீட்டு நிறுவனத்திற்கு இழப்பீடு வழங்க மறுப்பதற்கு உறுதியான ஆதாரம் உள்ளது என்று கூறி, கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பை தள்ளுபடி செய்துவிட்டது.

இதற்கிடையில், திருடப்பட்ட அந்த தங்கப்பறவை இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்