கனடாவில் காதலனுக்காக மோசமான செயலுக்கு ஒப்புக்கொண்ட இளம்பெண்: பல ஆண்டுகளாகியும் தீராத சிக்கல்

Report Print Balamanuvelan in கனடா
3480Shares

கனடாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், தான் சிறுமியாக இருக்கும்போது தன்னை ஒருவர் காதலித்ததாக நம்பி அவருக்காக செய்ய ஒப்புக்கொண்ட மோசமான செயல் ஒன்று, இன்றுவரை தனக்கு தீராத சிக்கலாக தொடர்வதாக தெரிவித்துள்ளார்.

அப்போது அந்த பெண்ணுக்கு வயது 14 மட்டுமே... சமூக ஊடகங்களில் செல்பி வீடியோக்களை பதிவேறம் செய்யும் பழக்கம் கொண்ட அந்த சிறுமியை ஒரு நபர் ஈர்த்துள்ளார்.

தனக்கு 20 வயது என்றும், தான் அருகில்தான் வசிப்பதாகவும், அந்த பெண் மிகவும் அழகாக இருப்பதாகவும் அந்த நபர் கூற, பதின்ம வயதுக்கே உரிய அறியாமையால் அவர் சொல்வதை நம்பி, அவர் தன்னை விரும்புவதாக கற்பனை செய்துகொண்டிருக்கிறாள் அந்த பெண்.

இப்படியே ‘காதலர்கள்’ நெருக்கமாக, ஒருநாள் அந்த பெண்ணின் உடலை பார்க்கவேண்டும் என்று கேட்டிருக்கிறார் அந்த நபர்.

எங்கே அவர் சொல்வதை கேட்காவிட்டால், அவர் தன்னை பிரிந்துவிடுவாரோ என்று எண்ணி, கணினியிலுள்ள கமெரா முன் அவர் கேட்டதையெல்லாம் செய்திருக்கிறாள் அந்த பெண்.

சிறிது நாட்களுக்குப் பிறகு, அந்த நபர், அந்த பெண்ணை தொடர்பு கொள்வதை நிறுத்திவிட்டிருக்கிறார்.

அதற்குப் பிறகுதான் தொடங்கியிருக்கிறது பிரச்சினை! அந்த பெண்ணின் வீடியோக்கள், ஆபாச வலைத்தளங்களில் வரத் தொடங்கியுள்ளன. பலர் அவளை அழைத்து அவளது வீடியோக்கள் இணையத்தில் உலாவருவதாக கூறியிருக்கிறார்கள்.

பின்னர் அதுவே மிரட்டலாக மாறியிருக்கிறது, அவரது வீட்டின் படம், முகவரி என எல்லாமே இணையத்தில் பரவத் தொடங்கியிருக்கின்றன.

இதை எப்படியாவது முடிவுக்கு கொண்டு வர முடிவு செய்த அந்த பெண் (இப்போது அவர் ஒரு இளம்பெண்), தன் வீடியோக்களை வெளியிடும் இணையதளங்களை தொடர்புகொண்டு அந்த வீடியோக்களை நீக்கி விட கோரியிருக்கிறார்.

கோரிக்கை நிறைவேறாதபோது, தன்னை ஒரு சட்டத்தரணியாக காட்டிக்கொண்டு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்போவதாக மிரட்டியிருக்கிறார்.

ஆனால், அதற்கான சரியான சட்டம் இருந்தால்தானே! இதுபோன்ற வீடியோக்களை எளிதாக பதிவேற்றம் செய்துவிடலாம், ஆனால், அவற்றை அகற்றுவது பெரும்பாடு, அதற்கு இந்த பெண் ஒரு உதாரணம்.

அவரது கதையைக் கேட்டபின், கனடாவின் சிறுவர் பாதுகாப்பு மையம் தற்போது அவரது வீடியோக்களை மட்டுமின்றி, சிறார்கள் தொடர்பான மோசமான வீடியோக்களை அகற்றும் முயற்சியில் இறங்கியுள்ளது.

ஆனால், அது உண்மையில் மிகப்பெரிய சவால்... என்றாலும், சமூக ஊடகங்களை அணுகி ஒவ்வொன்றிடமும் விசாரணைகள் நடத்தி, இந்த சிக்கலை தவிர்ப்பது எப்படி என அறியும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது அந்த அமைப்பு.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்