இந்திய விவசாயிகளுக்காக முதல் உலகத்தலைவராக குரல் கொடுத்த ஜஸ்ட்டின் ட்ரூடோ! போராட்டத்திற்கு ஆதரவு என அறிவிப்பு

Report Print Santhan in கனடா
197Shares

இந்தியாவின் டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு, கனடா பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோ தன்னுடைய ஆதரவதை தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து பல்வேறு விவசாயிகள் ஒன்று சேர்ந்து தலைநகரான டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஆரம்பத்தில் சாதரணமாக பார்க்கப்பட்ட இந்த போராட்டம் இப்போது மிகப் பெரிய போராட்டமாக உருவெடுத்து, உலக அளவில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது.

இந்நிலையில், இந்த போராட்டம் குறித்து கனடா பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோ கூறுகையில், விவசாயிகள் எதிர்ப்பு குறித்து இந்தியாவில் இருந்து செய்திகள் வருகின்றன.

உரிமைகளைப் பாதுகாக்க நடைபெறும் அமைதியான போராட்டத்திற்கு கனடா எப்போதும் ஆதரவளிக்கும்.

உரையாடலின் முக்கியத்துவத்தை நாங்கள் நம்புகிறோம். அதனால்தான், எங்கள் நிலைகளை இந்திய அதிகாரிகளிடம் தெரிவிக்க பல வழிகளில் முயல்கிறோம். இது நாம் அனைவரும் ஒன்றிணைவதற்கான தருணம் என்று உலக சீக்கிய அமைப்பால் வெளியிடப்பட்ட விடியோவில் ஜஸ்டீன் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

இந்த போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த முதல் உலகத்தலைவர் ஜஸ்ட்டின் ட்ரூடோ என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்