சமூகவலைதளம் மூலம் பெண்களுடன் பழகுவான்! நேரில் வரசெய்து போதை மருந்து... கனடாவில் சிக்கிய இளைஞனின் பகீர் பின்னணி

Report Print Raju Raju in கனடா
3406Shares

கனடாவில் இளம்பெண்களிடம் சமூகவலைதளங்கள் மூலம் பழகி அவர்களை நேரில் சந்தித்து போதை மருந்துகளை கொடுத்த நபர் 10 மாதங்களுக்கு பின்னர் பொலிசில் சிக்கியுள்ளார்.

கால்கரியில் கடந்த ஜனவரி மாதம் Mohammad Rashid Mustafa (25) என்ற இளைஞன் 13 வயது சிறுமியுடன் சமூகவலைதளம் மூலம் நட்பாகியுள்ளார்.

பின்னர் அவரை நேரில் சந்தித்த Rashid அவரிடம் கவர்ந்து பேசி மதுபானம் மற்றும் போதை மருந்துகளை கொடுத்து தவறாக நடந்து கொண்டார்.

இது தொடர்பில் புகார் கொடுக்கப்பட்ட நிலையிலும் Rashid பொலிசில் சிக்கவில்லை. இதன் பின்னர் மேலும் சில பெண்களிடம் இதே பாணியில் மயக்கி பேசி நினைத்தை சாதித்துள்ளார் Rashid.

இந்த நிலையில் 10 மாதங்களுக்கு பின்னர் அவரை பொலிசார் சில தினங்களுக்கு முன்னர் கைது செய்துள்ளனர்.

Rashid மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அவர் அடுத்தமாதம் 22ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார் என தெரியவந்துள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்