எப்போதோ நடந்த ஒரு வெடி விபத்து புலம்பெயர்வோர் ஒருவர் வாழ்வில் எப்படி விளையாடியிருக்கிறது பாருங்கள்!

Report Print Balamanuvelan in கனடா

வெடிவிபத்து போன்ற செய்திகளை கேட்கும்போது, பெரும்பாலும், ஒரு விபத்து நடந்தது, அதில் இத்தனை பேர் இறந்தார்கள் என்ற செய்தி வரும்.

அச்சச்சோ என நாம் கொஞ்ச நேரம் கவலைப்பட்டுவிட்டு, பிறகு நம் வேலையைப் பார்க்கப்போய்விடுவோம்.

ஆனால், அந்த விபத்தில் சிக்கியவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் தனிப்பட்ட முறையில் என்ன பாதிப்புக்குள்ளானார்கள் என்றெல்லாம் பெரும்பாலும் யாரும் உட்கார்ந்து கவலைப்பட்டுக்கொண்டிருக்கமாட்டோம்.

அதேபோல், ஆகத்து மாதம் 4ஆம் திகதி, லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஒரு வெடி விபத்து ஏற்பட்டது.

2,750 கிலோகிராம் ரசாயனப் பொருள் ஒன்று வெடித்துச் சிதறியதில் 204 பேர் உயிரிழந்தார்கள், 6,500 பேர் காயமடைந்தார்கள்.

SELAM NEGA/SUPPLIED

அந்த நேரத்தில்தான் கனடாவுக்கு புலம்பெயரும் நடவடிக்கைகளில் பரபரப்பாக ஈடுபட்டுக்கொண்டிருந்தார் Selam Nega.

கட்டிய கணவன் வயிற்றில் பிள்ளையைக் கொடுத்துவிட்டு, தான் கனடாவுக்குச் சென்று Negaவை அழைத்துக்கொள்வதாக கூறிச் சென்றான்.

போனவன் போனவன்தான், கனடா சென்றதும் Negaவுடனான தொடர்புகளை முறித்துக்கொண்டான் அந்த நயவஞ்சகன்.

அதற்குப் பிறகு தானே முயன்று, தன் நான்கு வயது மகன் Daniயுடன் கனடாவுக்கு புலம்பெயர இருந்த நேரத்தில், ஆவணம் ஒன்று சமர்ப்பிக்கப்படவில்லை என்ற தகவல் இடியாக இறங்க, அதை பெறும் முயற்சியின்போது, வெடிவிபத்தால் கொரோனா பயங்கரமாக பரவியதால் 42,000 பேர் நோய்த்தொற்றுக்கு ஆளாகி 277 பேர் உயிரிழக்க, நாடு முடக்கப்பட்டது.

அப்போது தன் வேலையையும் விட்டு, வீட்டையும் காலி செய்து கனடா புறப்பட தயாராக இருந்தார் Nega.

வெடி விபத்தும் கொரோனாவும் நாட்டை மட்டுமல்ல, Negaவின் திட்டங்களையும் முடக்கிப்போட்டுவிட்டன.

மீண்டும் தன் பழைய வீட்டுக்கே திரும்பி, அந்த குறிப்பிட்ட ஆவணம் வருவதற்காக காத்திருக்கிறார் Nega.

பிரச்சினை என்னவென்றால், Daniயின் ஒரே பெற்றோர், தான் மட்டுமே என Nega லெபனான் அரசுக்கு நிரூபிக்கவேண்டும். ஆனால், அதற்கான ஆவணத்தை அளிக்கும் அலுவலகங்கள் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டுள்ளன.

எப்போது இந்த கொரோனா பிரச்சினை தீரும் என, நம்மைப் போலவே காத்திருக்கிறார் Negaவும்...

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்